தமிழக அரசு ஏப்ரல் மாதம் முதல் மாநிலத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கட்டணத்தை உயர்த்திய பிறகும், இந்தியாவில் - தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என அரசு கூறினாலும், இந்த உயர்வுக்கு பிறகு மின் கட்டணம் முந்தைய கட்டணங்களை விட பல மடங்கு உயர்ந்திருப்பது - பலரை பாதித்துள்ளது.
பழைய கட்டணப்படி 100 யூனிட்டுக்கு 70 ரூபாய் கட்டியவர்கள் தற்போது 100 ரூபாய் கட்டுகிறார்கள்.
பழைய கட்டணப்படி 200 யூனிட்டுக்கு 230 ரூபாய் கட்டியவர்கள் தற்போது 300 ரூபாய் கட்டுகிறார்கள்.
பழைய கட்டணப்படி 500 யூனிட்டுக்கு 970 ரூபாய் கட்டியவர்கள் தற்போது 1330 ரூபாய் கட்டுகிறார்கள்.
பழைய கட்டணப்படி 600 யூனிட்டுக்கு 1190 ரூபாய் கட்டியவர்கள் தற்போது 2375 ரூபாய் கட்டுகிறார்கள்.
முந்தைய கட்டண விபரம்
முந்தைய கட்டண முறையில் - 100 யூனிட் வரை பயன்படுத்துவோர், 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் என பிரிக்கப்பட்டு, கட்டணம்
நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும் - மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தினாலும் (உதாரணமாக 700 யூனிட்) - அரசு பிரித்திருந்த தகுதி
அடிப்படையிலேயே தான் (0-50, 51-100, 101-200, 201-600, > 600) - தொகையும் நிர்ணயிக்கப்பட்டது.
அதாவது 700 யூனிட்டுக்கு கணக்கிடும்போது - 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் கட்டணமும், 201 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துவோர்
கட்டணமும் கூட்டப்பட்டே - 700 யூனிட்டுக்கு - கட்டணத் தொகை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் தற்போது அப்படி இல்லை.
தற்போதைய கட்டண விபரம்
தற்போது அரசு - மின் சக்தியை பயன்படுத்துபவர்களை நான்கு வகையாக பிரித்து (100 யூனிட் வரை பயன்படுத்துவோர், 200 யூனிட் வரை
பயன்படுத்துவோர், 500 யூனிட் வரை பயன்படுத்துவோர், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர்) - அவர்களுக்கு தனி தனி கட்டணத்தை
நிர்ணயித்துள்ளது. இதனால் - ஒவ்வொரு கட்டண எல்லையை தாண்டுவோர் மின் கட்டணம், கடுமையான அளவில் உயர்கின்றது.
உதாரணமாக - 100 யூனிட் பயன்படுத்துபவர் கட்டணமும், 101 யூனிட் பயன்படுத்துபவர் கட்டணம் பெருத்த அளவில் வேறுபடும். 200 யூனிட்
பயன்படுத்துபவர் கட்டணமும், 201 யூனிட் பயன்படுத்துபவர் கட்டணம் பெருத்த அளவில் வேறுபடும். அதுபோல 500 யூனிட் பயன்படுத்துபவர்
கட்டணமும், 501 யூனிட் பயன்படுத்துபவர் கட்டணம் பெருத்த அளவில் வேறுபடும்.
இதனால் - எந்த தினத்தில் - மின் பயன்பாடு குறித்த அளவு - வீடுகளில், மின்சார ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பது முக்கியமாகிறது.
பொதுவாக இரண்டு மாதங்களுக்கு (60 நாட்களுக்கு) ஒரு முறை அளவிட வேண்டும் என்பது விதிமுறை.
காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக மின் பயன்பாடு அளவிடப்பட்ட நாட்கள் குறித்த விபரம்:
ஆகஸ்ட் 10, 2012 (63 நாட்களுக்கு பிறகு)
ஜூன் 8, 2012 (57 நாட்களுக்கு பிறகு)
ஏப்ரல் 12, 2012 (63 நாட்களுக்கு பிறகு)
பிப்ரவரி 9, 2012 (57 நாட்களுக்கு பிறகு)
டிசம்பர் 13, 2011
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சராசரியாக 60 நாட்கள் என வந்தாலும், சில நாட்கள் வித்தியாசத்தில் கட்டண எல்லையை (Slab) தாண்ட வாய்ப்புள்ளதால், மின் சக்தி பயன்படுத்துவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
[தொடரும்]
[பாகம் 1] | [பாகம் 2] | [பாகம் 3] | [பாகம் 4]
|