Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:40:12 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9145
#KOTW9145
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 15, 2012
உயர்ந்துள்ள மின்சார கட்டணம்! எதிர்கொள்வது எப்படி? (பாகம் 3)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5400 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதிய கட்டணம் அரசினால் அமல்படுத்தப்பட்ட பின் - பெறப்பட்ட முதல் ரசீதை கண்ட மக்கள் பலர், காயல்பட்டினம் மின்சார வாரியத்தை அணுகியுள்ளனர். உங்கள் வீட்டில் குளிர்சாதனம் (AC) இருந்தால் கண்டிப்பாக கூடுதல் பில் வரும் என மின்சார வாரிய அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் பலருக்கு தங்களின் மின்சாதனங்கள் - பயன்படுத்தும் மின்சார அளவு குறித்த தகவல் தெரிவதில்லை. அன்றாடும் வீட்டில் பலர் பயன்படுத்தும், சாதனங்களும், அவைகள் உபயோகிக்கும் மின் அளவும் கீழே தரப்பட்டுள்ளது. தகவல் - ஒரு மாதத்திற்கு, யூனிட் அளவில் வழங்கப்பட்டுள்ளது. நமது மின்சார கட்டணம் இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டவேண்டும். ஆகவே - கீழே தரப்பட்டுள்ள தகவலை இரட்டிப்பாக்கி சரிபார்த்துக்கொள்ளவும்.

சாதனம் - பல்பு
சக்தி - 60 W
தினசரி உத்தேச பயன்பாடு - 10 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 18 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - CFL
சக்தி - 15 W
தினசரி உத்தேச பயன்பாடு - 10 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 4.5 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - டியூப்லைட்
சக்தி - 40 W
தினசரி உத்தேச பயன்பாடு - 10 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 12 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - இஸ்திரி பெட்டி
சக்தி - 750 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 22.5 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - தண்ணீரில் முக்கப்படும் ஹீட்டர்
சக்தி - 1000 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 30 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - சாதாரண தண்ணீர் ஹீட்டர்
சக்தி - 2000 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 60 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - உடனடி கேய்செர் (Instant Geyser)
சக்தி - 3000 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 90 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - குளிர்சாதன பெட்டி (Fridge) [165 லிட்டர்]
சக்தி - 150 W
தினசரி உத்தேச பயன்பாடு - 24 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 108 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - குளிர்சாதனம் (AC) [1.5 டன்]
சக்தி - 2650 W
தினசரி உத்தேச பயன்பாடு - 8 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 636 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - அறை குளிர் சாதனம் (Room Cooler)
சக்தி - 200 W
தினசரி உத்தேச பயன்பாடு - 8 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 48 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - பேன் (Table/Ceiling)
சக்தி - 75 W
தினசரி உத்தேச பயன்பாடு - 12 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 27 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - Exhaust Fan
சக்தி - 150 W
தினசரி உத்தேச பயன்பாடு - 8 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 36 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - சலவை இயந்திரம் (Washing Machine)
சக்தி - 400 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 12 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - தொலைகாட்சி
சக்தி - 100 W
தினசரி உத்தேச பயன்பாடு - 8 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 36 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - Mixer
சக்தி - 500 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 15 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - அரவை இயந்திரம் (Wet Grinder)
சக்தி - 300 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 9 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - நுண்ணலை அடுப்பு (Microwave Oven)
சக்தி - 1200 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 36 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - கணினி
சக்தி - 200 W
தினசரி உத்தேச பயன்பாடு - 10 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 60 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - கொசு எதிர்ப்பு கருவி
சக்தி - 9 W
தினசரி உத்தேச பயன்பாடு - 12 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 3.24 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - பம்ப் மோட்டார் (1 HP)
சக்தி - 740 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 22 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - பேட்டரி சார்ஜர்
சக்தி - 7 W
தினசரி உத்தேச பயன்பாடு - 8 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 1.68 யூனிட் பிரதி மாதம்


சாதனம் - ரைஸ் கூக்கர்
சக்தி - 660 W
தினசரி உத்தேச பயன்பாடு - 1 மணி நேரம்
மாத பயன்பாடு யூனிட் அளவு - 19.8 யூனிட் பிரதி மாதம்


[தொடரும்]

[பாகம் 1] | [பாகம் 2] | [பாகம் 3] | [பாகம் 4]

[செய்தி திருத்தப்பட்டது @ 1:50 pm / 26.09.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்ல உபயோகமான தகவல்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [15 September 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 22179

நல்ல உபயோகமான தகவல்கள். தாய்மார்கள் இதை படித்தாலே போதும். மின்சாரத்தை நன்றாக மிச்சம்பிடிக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மின்சார பயனீட்டு அட்டவணை
posted by S.A.Muhammad Ali (Dubai) [15 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22182

மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று தெரியும். ஆனால் இப்பொழுது மின்சார வாரியத்தின் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது.

மின்சார நிலைய ஊழியர்கள் எங்கள் வீட்டில் அட்டையில் மின்சார அளவீட்டை குறிப்பிடாது வெறும் தொகையை மட்டுமே ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்து செல்கிறார். இதனால் பழைய அளவு எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியவில்லை. நமது பெண்களுக்கு இதை பற்றி முறையான விளக்கம் அளிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

இதற்கு ஒரு சார்ட் ஒன்று பிரிண்ட் செய்து மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை, 5 நாட்களுக்கு ஒருமுறை மின்சார உபயோகத்தின் அளவீடு ஆகியவற்றை நோன்பு கால அட்டவணை போன்று வியாபார நிறுவனங்கள் விளம்பரத்துடன் விநியோகித்தால் நல்லது. பெண்கள் தங்கள் வீட்டில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை எவ்வளவு ரீடிங் உபயோகித்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு தங்களது பட்ஜெட்டிற்குள் மின்சாரத்தை சிக்கனமாக உபயோக படுத்தி கொள்வார்கள்.

நாளுக்கு நாள் உயரே பறந்து விண்ணை முட்டும் விலைவாசியில் நடுத்தர குடும்பத்தினர் படும் பாடு சொல்லி மாளாது.

வீடுகள் அமைக்கும் போது நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் வரும்படி ஜன்னல்கள் அமைப்பதால் பகலில் மின்சாரம் பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

தண்ணீரை சிக்கனமாக செலவளிப்பதன் மூலம் அடிக்கடி நிலத்தடி நீரை டாங்கிற்கு பம்ப் செய்ய வேண்டிவராது மின்சாரம் சிக்கனமாகும்.

நீண்ட நேரம் கழித்து தான் மீண்டும் உபயோகப்படுத்துவோம் என்றால் டிவி,டிஷ் ரிசீவர்,கம்பியூட்டர்,டி.வீ.டி பிளேயர் போன்றவற்றை Stand-by யில் வைக்காமல் பவர் ஆஃப் செய்து விடவும்.

தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரம் மட்டும் விளக்குகள், ஃபேன்கள் பயன் படுத்த வேண்டும்.

மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளும் அது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது தானா என பார்த்து வாங்க வேண்டும்.

எல்லா பொருட்களிலும் அதன் மின் செலவை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர்கள். அதை படித்து புரிந்து கொள்ள வேண்டும் ஒரு Watts என்பது ஒரு மணி நேரம் அது செலவளிக்கும் மின்சக்தியின் அளவு. எந்த கருவி எவ்வளவு சக்தி செலவளிக்கும் என தெரிந்து கொள்ளலாம். நன்றி வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by kaleel (jeddah) [15 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22190

பழைய மின் விசிறி , குளிர் சாதன பொருட்களை சரி பார்க்கவும் இதனால் அதிக மின் விரயம் ஆஹும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by sulaiman (chennai) [26 September 2012]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 22424

useful information. ellathaiyum sonneenga , rice cookerai maranthutteenngalae

Administrator: நன்றி. ரைஸ் கூக்கருக்கான தகவல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்ட சாதனங்களை தவிர பிற சாதனங்களின் மின் உபயோகம் குறித்த தகவல் தெரிய எளிதான வழி உள்ளது.

ஒவ்வொரு சாதனத்திலும் - அதன் மின் உபயோக அளவு WATTS கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக Panasonic SR WA18HK Electric Cooker வகை குக்கர் 660 Watts மின்சாரம் பயன்படுத்துகிறது. தினமும் ஒரு மணி நேரம் அது பயன்படுத்தப்படுகிறது என வைத்துக்கொள்வோம். ஒரு மாத மின்சார பயன்பாட்டை அறிய கீழ்க்காணும் வழிமுறையை பின்பற்றவும்:

660 Watts * 1 மணி நேரம் * 30 நாட்கள் = 19,800 KWH
19,800 KWH / 1000 = 19.8 யூனிட் (ஒரு மாத பயனீடு)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved