உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பாக செயலாற்றி வரும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் - உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பாக நமது இக்ராஃ கல்விச் சங்கம் யாவரின் மேலான ஒத்துழைப்புகளுடன் சிறப்புற செயல்பட்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்!
இதுகாலம் வரை, காயல்பட்டினம் அலியார் தெரு, கதவு எண் 2/90 என்ற முகவரியில் (அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதிற்கு பின்புறம்) அமைந்துள்ள வாடகைக் கட்டிடத்தில் நமது இக்ராஃ கல்விச் சங்கம் செயல்பட்டு வந்தது. அக்கட்டிடத்தின் உரிமையாளருக்கு, அவ்விடம் தற்போது தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இக்ராஃவின் அலுவலகம் தற்போது காயல்பட்டினம் கே.டி.எம். தெரு - கதவு எண் 133 / 27 என்ற முகவரியில் (அதாவது, கே.டி.எம். தெரு ரஜாக் க்ளினிக் அருகில்- தென்புறம் ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இனி வருங்காலங்களில் இப்புதிய முகவரியிலேயே அனைவரும் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சல் முகவரியில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
இக்ராஃ (வாடகை) அலுவலகம் அவ்வப்போது மாற்றுவதன் மூலம் பெறும் சிரமம் ஏற்படுவதையும், வசதிக் குறைவுகளை கவனத்திற் கொண்டும், மேலும் திறம்பட செயலாற்றும் நோக்கத்துடனும் இக்ராஃவுக்கு சொந்தமாக இடம் வாங்கி, கட்டிடம் கட்டிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே என்றும் போல் யாவரின் மேலான ஒத்துழைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E. மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம். |