திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள ஹாஃபிழ்கள் தமது மனனத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் சிறப்பேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்களில் 8 பேர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள ஹாஃபிழ்களாவர். அவர்கள் தமது திருக்குர்ஆன் மனனத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, அம்மன்றத்தின் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 16.00 மணி முதல் 21.00 மணி வரை தமது திருக்குர்ஆன் மனனத்தை மீள்பார்வை செய்யவும், மீள்பார்வை செய்த பாடங்களை ஒப்புவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
16.09.2012 ஞாயிற்றுக்கிழமை முதல் இந்நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்துவக்க நிகழ்வில் 5 ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்று தமது பாடங்களை மீள்பார்வை செய்து ஒப்புவித்தனர்.
தற்கால அவசர உலகத்தின் வேகத்திற்கிடையில், தமது திருக்குர்ஆன் மனனத்தை வலுப்படுத்திக்கொள்ள இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தியளித்தமைக்காக மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு ஹாஃபிழ் உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், இவ்வரிய வாய்ப்பை தாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
ஹஸன் மவ்லானா |