இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளை சார்பில், 17.09.2012 திங்கட்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் நகர தலைவர் எம்.கே.ஜாஹிர் தலைமை தாங்கினார். தமுமுகவின் அரசியலமைப்பான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பி.ஜோஸப் நோலாஸ்கோ, தமுமுக மற்றும் மமகவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத், தமுமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் பாளை ஃபாரூக் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அங்கத்தினரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|