மேல ஆத்தூரில் அமைந்துள்ள நீர் தேக்கத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் தண்ணீர் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் தண்ணீரில் 3 - 5 லட்சம் தண்ணீர் குறைவாகவே வருவதாகவே - காயல்பட்டினம் நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நீர் தேக்கத்தை பராமரிக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள் - குடிநீர் சரியான அளவில் வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் அளவு நவீன மீட்டர் மூலம் பதியப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நகராட்சியில் ஆய்வுகள் மேற்கொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் அலுவலர்கள் - தங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அதில் நகரில் முறையற்ற இணைப்புகள் உள்ளன என்றும், பம்பிங் மெய்ன் இணைப்பில் இருந்து சட்டவிரோதமாக பலருக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் என பல காரணங்களை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் - ஞாயிறு முதல் - மேல ஆத்தூரில் இருந்து காயல்பட்டினத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 23 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கும் காலங்களில் - இரவில் துவங்கி, மறு நாள் மதியம் வரை தண்ணீர் - தினமும் - காயல்பட்டினத்திற்கு அனுப்பப்படும். தற்போது தண்ணீர் தட்டுபாடு நிலவுவதால் - 13 லட்சம் லிட்டர் தண்ணீரே அனுப்பப்படுகிறது. ஆகவே - இரவு 8 மணிக்கு துவங்கி, அதிகாலை 6 மணி வரை தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
மேல ஆத்தூரில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரின் வரத்தை முழுமையாக கண்காணிக்க பகல் நேரத்தில் தண்ணீரை அனுப்ப - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கேட்டுக்கொண்டததற்கு இணங்க - அதிகாலை 4:30 மணி முதல் மாலை 3 மணி வரை தண்ணீர் இனி அனுப்பப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துணை பொறியாளர் - பாலசுப்ரமணியம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து - மேல ஆத்தூரில் இருந்து பிற ஊர்களுக்கு தண்ணீர் அனுப்பப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
சட்ட விரோதமாக MAIN LINE NIL இருந்து ஓட்டை போட்டு
எடுக்கும் எந்த நிர்வகமுமாக இருந்தாலும்
தயவு தாட்சனை இன்றி நடவடிக்கை எடுங்கள்
சாகுபுரத்தில் இருந்து காயல்பட்டணத்துக்கு எவளவு தண்ணீர் வருகின்றது என்று கணக்கிட்டு பாருங்கள்
வெளிச்சத்துக்கு வந்து விடும் உண்மை நிலவரம்
இது நாள் வரைக்கும் அமைதியாக இருந்தது இப்பொழுது
வேலில வரபோகுது உண்மை நிலவரம் , நம் காயலுக்கு எவளவு தண்ணீர் வருகின்றது என்று
பொருத்து இருந்து பார்க்கலாம் ,
தலைவியும் உண்மையை சொல்லுவார்களா இல்லை
மாட்டார்களா என்று
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross