சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் தினசரி ஒரு விமான சேவை இயக்கப்படுகிறது. SpiceJet விமானம் [SG 3291] - தினசரி காலை 9:10 க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடியை 10:35 க்கு வந்தடைகிறது.
அதுபோல SpiceJet விமானம் [SG 3292] - தினசரி காலை 10:55 க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, சென்னையை மதியம் 12:20 க்கு வந்தடைகிறது.
இதே மார்க்கத்தில் தற்போது மற்றொரு விமானம் - SpiceJet நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை - வாரம் ஐந்து நாட்கள் (திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு) இயக்கப்படும். மேலும் - இந்த சேவை மூலம் பெங்களுரு நகரமும் - தூத்துக்குடியுடன் இணைக்கப்படுகிறது. இந்த சேவை செப்டம்பர் 27 அன்று துவங்கும்.
SpiceJet விமானம் [SG 1083]
பெங்களுரு புறப்பாடு - மதியம் 2:35
சென்னை வருகை - மாலை 3:20
சென்னை புறப்பாடு - மாலை 3:40
தூத்துக்குடி வருகை - மாலை 4:50
SpiceJet விமானம் [SG 1084]
தூத்துக்குடி புறப்பாடு - மாலை 5:10
சென்னை வருகை - மாலை 6:15
சென்னை புறப்பாடு - மாலை 6:35
பெங்களுரு வருகை - இரவு 7:30
இம்மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த KingFisher விமான சேவை சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
|