சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் வியாழக்கிழமை (இன்று) கடையடைப்பு நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கம் மற்றும் ஆறுமுகனேரி அனைத்து வியாபாரிகள் சங்கம் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆறுமுகனேரியில் பள்ளிவாசல் பஜார், அடைக்கலாபுரம் சாலை, காயல்பட்டினம் சாலை மத்திய பஜார் மற்றும் வடக்கு பஜார் உள்ளிட்ட இடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் முழு கடையடைப்பில் பங்கேற்றன.
காயல்பட்டினத்தில் பிரதான வீதி, கூலக்கடை பஜார், பேரூந்து நிலைய வளாகம் மற்றும் திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆத்தூர், தெற்கு ஆத்தூர், பழையகாயல் மற்றும் முக்காணி பகுதியிலும் முழு கடையடைப்பு நடைபெற்றது. |