காயல்பட்டினம் நகர்மன்றத்தினை கலைத்திட தூத்துக்குடி மாவட்ட ஜனதா கட்சி சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இது
குறித்து இன்று வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் வருமாறு:-
3. Re:... posted byabdul rahman (al baha )[21 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22350
அஸ்ஸலாமு அழைக்கும்.............
துத்துக்குடி மாவட்ட ஜனதா கட்சின் துணை தலைவர் திரு .மூசா காகா காயல்பட்டினம் நகர்மன்றத்தில் மொத்தம் 18 உறுபினர்கள் அல்லவ. நீங்கள் கூறியுள்ளது 14உறுபினர்கள் அப்படியானால் மீதம் உள்ள 4 உறுபினர்கள் யார் ? ............
4. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[21 September 2012] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22355
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் நகர ஜனதா கட்சியினர் பிரசுரம் அருமை........மாவட்ட துணை தலைவர் .S.L. மூசா நெய்னா அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் சூப்பர்...... இந்த நோட்டிஸ் கேள்விகளுக்கு நம் நகர் மன்ற உறுப்பினர்கள் என்ன தான் பதில் தருவார்கள் ???
தயவு செய்து பொது மக்களாகிய நாங்கள் உங்கள் யாவர்களிடமும் கேட்பது ஓன்று தான் .....அதாவது இந்த ஒரு வருசத்தில் நீங்கள் நம் ஊர் மக்களுக்கு என்ன தான் நல்ல காரியங்கள் செய்து உள்ளீர்கள் ???
மேலைக்கு நீங்கள் என்னதான் செய்ய நாடி உள்ளீர்கள் ???? இது போன்று ஒரே வெளி நடப்பு தானா????
எல்லா நகர் மன்ற கூட்டதையும் நீங்கள் எங்கே ஒழுங்காக நடத்த விட்டீர்கள் ?? ஒரே பிரச்சனைதானே உண்டு பண்ணி ....வெளி நடப்பு செய்து பொது மக்களின் வரி பணத்தை வீண் பண்ணினீர்கள் .....
வெளி படையான நிர்வாகம் பண்ண முயற்சிப்பது தப்பா ???
நகர் மன்ற கூட்டத்தை வீடியோ கவர் பண்ணுவது தப்பா ????
ஏன் நீங்கள் எல்லாம் நகர் மன்ற கூட்டம் நடக்கும் சமயம் பேசுகின்ற பேச்சுகளை நாங்களும் அறிவோம்....என்கிற பயமா ????என்னா????
இப்படியே போனால் இன்ஷா அல்லாஹ் அடுத்த நகர் மன்ற தேர்தலில் நீங்கள் எல்லாம் எப்படித்தான் நம் ஊர் பொது மக்கள் முன் நிற்பீர்கள் ???? கொஞ்சம் தாங்கள் எல்லாம் யோசிக்கவும்.
சின்ன ....சின்ன ....பிரச்சனைகளை...ஊதி....ஊதி ....பெர்சு.....பண்ணாதீர்கள்.....நம் ஊரின் நன்மையை நாடுங்கள்.நம் ஊர் பொது மக்களிடம் நல்ல காரியங்களை செய்து நெருக்கத்தை ஏற்படுத்துகள் .......
நம் நகர ஜனதா.மாவட்ட துணை தலைவர் .S.L. மூசா நெய்னா அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் துணிச்சலானது .....பாராட்டுக்குரியது.......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
5. காக்க...காக்க...ஸாரி...காக்கா...காக்கா.. posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[22 September 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22357
தாம் மாவட்ட துணைத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையே தூள் கிழப்புகிறதே? இனி வரும் அறிக்கைகள் எப்படி இருக்குமோ? கட்டையாரே! நான் உங்களை சும்மா தமாஷ் பண்ணுற ஆள்ன்னு தான் நினச்சேன். சவுக்கடி கொடுத்து சரளமாக் கேள்வி கேட்கும் சாமர்த்தியம் எங்கிருந்து வந்தது? சாது மிரண்டால் காடு கொள்ளாது எனும் கதியாகிப் போச்சே?
நகர் மன்றத்தின் கூட்டங்கள் தடைபடக் காரணமான “(காக்கா) ஒரு நிமிஷம்! எனக்கு ஃபோன் வருது...ஹலோ..யாரு? சொல்லுங்க காக்கா! ஆமா காக்கா...நீங்க தான்னு ஊருக்கே தெரியும் காக்கா! கொஞ்சம் இருங்க காக்கா நான் இப்ப கட்டை காக்கா நோட்டீசுக்கு கமெண்ட்ஸ் எழுதிட்டு இருக்கேன் காக்கா! சரி காக்கா சென்னைக்கு வந்தா கட்டாயம் உங்களை வந்து பார்க்கிறேன் காக்கா....சரி ஆகட்டும் காக்கா....வஅலைக்குமுஸ்ஸலாம்”,
மன்னிக்கணும்! சென்னையிலிருந்து எங்க பெருமாவீட்டு காக்கா அலி அக்பர் போன் போட்டிருந்தார். சரி கருத்தை எங்க விட்டேன்?
ஆமா! நகர் மன்றத்தின் கூட்டங்கள் தடைபடக் காரணமான காரணகர்த்தாவை தாங்கள் வெளிப்படையாக விமர்சித்திருந்தது உங்கள் அசாத்திய துனிவை வெளிப்படுத்தியது. பாராட்டுக்கள்! அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள தாங்கள் தங்களால் ஆன நன்மைகளை நமதூருக்கு செய்வீர்கள் என நம்புகின்றேன்.வாழ்த்துக்கள்...!
6. Powerful weapon posted byRiyath (HongKong)[22 September 2012] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 22359
Strategic Communication is the most Powerful weapon in this world. Brother Moosa taken that for right thing at right time
keep it up and wish you to succeed on this.
7. Re:... posted byM.Jahangir (kayalpatnam)[22 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22376
அன்புள்ள K.D.N.முஹம்மது லெப்பை காக்கா அவர்களே நீங்கள் உண்மையை தெரிந்து கொண்டு கேட்கின்றீர்களா? அல்லது உண்மையிலேயே தெரியாமல் கேட்கின்றீர்களா?
நான் அறியாதவர்களுக்கு பதில் தருவது இல்லை. இந்த கேள்வியை பினாமிகள் கேட்டிருந்தால் பதில் தரமாட்டேன். உங்களைப் போன்றவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக இங்கு பதில் தருகிறேன்.
முதலில் "பொதுமக்களின் பார்வைக்கும் முடிவுக்கும்" என்ற நோட்டீஸ் பெற்றுக் கொண்டோம் நன்றி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு தான் அந்த நோட்டீஸை அனுப்பியது. முகவரி இல்லாத கட்சிக்கு இந்த நோட்டீஸை யாரும் அனுப்பவில்லை.
உறுப்பினர்கள் தலைவிக்கு ஒத்துழைக்கவில்லை என்று யாரேனும் குற்றம் சொல்வார்களேயானால். எந்த விசயத்தில் ஒத்துழைப்பு தரவில்லை என்று ஆதாரங்களுடன் கூற வேண்டும். மொட்டையாக அனைவருக்கும் மொட்டை அடிக்க முயற்சிக்க கூடாது.
நம் ஊரில் முன்னேற்றப் பணிகள் நடைபெறவில்லை என்றால் அதற்கு உறுப்பினர்கள் பொறுப்பா? தீர்மானம் நிறைவேற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அவசியம் அதனை உறுப்பினர்களாகிய நாங்கள் முழுமையாக கொடுத்துவிட்டோம். அந்த தீர்மானம் செயல் வடிவம்பெற தலைவிதான் அதிகாரிகளிடம் வேலை வாங்க வேண்டும். இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?
யார் உடைய ஆலோசனைப்படி உறுப்பினர்கள் நடக்கிறார்கள்? தைரியம் உள்ளவர்களாக இருந்தால் அந்த பெயரையும் வெளியிட்டு இருக்கலாமே?
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாங்கள் பெறும் பணம் 600 ரூபாய். ஆனால் மாதத்தின் மீதம் உள்ள 29 நாட்களும் நகராட்சிக்கு பொதுமக்களின் வேலைக்காக பைக்கிள் செல்வதற்கு பெட்ரோல் வகைக்கு இந்த 600 ரூபாய் போதுமா? அதற்கு மேலும் நாங்கள் எங்கள் கையில் இருந்து பணத்தை செலவலித்து மக்கள் பணியை செய்து வருகிறோம். இதற்கு நம்மை படைத்த இறைவன் சாட்சி.
வீடியோ எடுத்து வெளியிட்டால் அதுமட்டும் தான் வெளிப்படையான நகராட்சியா? ஆட்டுத் தொட்டி ஏலம் எடுத்த நபரை வாபஸ் வாங்க சொல்லி நடத்தப்பட்ட நாடகத்தை ஊர் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அதனை வெளிப்படையாக சொல்லுங்கள்?
வீடியோ பதிவு செய்வதால் சட்ட சிக்கல்கள் எழும் அதனால்தான் வேண்டாம் என்கிறோம். இதுகுறித்து மேலும் விபரம் தேவைப்பட்டால் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நகராட்சி தலைவி அவர்களை எந்த பணி செய்யவிடாமல் தடுத்தோம் என்பதை ஆதரங்களுடன் தெரிவித்தால், பொதுமக்கள் யார் பக்கம் ஞாயம் இருக்கின்றது என்று அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
இந்த நகராட்சியில் ஒரு பணியும் நடக்கவில்லை என்று இந்த நோட்டீஸ்லேயே குறிப்பிடப்பட்டடுள்ளது. பிறகு எங்கிருந்து ஊழல் செய்யவாம்? உறுப்பினர்கள் அவரவர் வீட்டு பணியை துவங்கி அதில்தான் ஊழல் செய்ய வேண்டும். நடுநிலையாளர்களே புறிந்துகொள்ளுங்கள்.
என்னிடம் அவர்கள் எந்த தீர்மானங்களை மாற்றி எழுதினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றது, தேவைபடுபவர்கள் நேரில் சந்தித்து பெறலாம். அதனை இணையதளத்தில் தரஇயலாது.
யாருக்கும் துதிபாட, ஜால்ரா அடிக்க, நாம் ஆதிரிக்கும் ஒருவர் தவறு செய்கிறார் என்று தெரிந்து, அதனை தட்டிக்கேட்காமல் இருக்க நான் துப்புகெட்டவன் கிடையாது. தவறு யார் செய்தாலும் அதனை சுட்டிக்காட்ட தயங்குபவனும் நான் அல்ல.
தலைவியை ஆதரிக்கும் உறுப்பினர்களில் சிலரை துணைத் தலைவர் தேர்தலின் போது இந்த நோட்டீஸை வெளியிட்ட நபர்களின் நண்பர்களும், தலைவியின் ஆதரவாளர்களும் அயோக்கியர்கள் என்று சொன்னார்கள், பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.
தற்போது அந்த உறுப்பினர்கள் தலைவியை ஆதரிப்பதால் ஊர் நலனில் அக்கறை உடையவர்கள் ஆகிவிட்டார்களா? இதை சொல்வதற்கு அவர்களுக்கு வெக்கமாக இல்லையா?
ஊருக்கு வேலைகளை செய்யவிடாமல் தடுக்கும் அராஜகப்போக்கை கையாளுபவர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். ஊருக்கு நல்ல வேலைகளை செய்யும் போது யார் தடுத்தார்கள் என்று சொல்லவா? ஆதாரங்களுடன் நிருபித்தால் ராஜினாமா செய்வாரா?
ஒன்று மட்டும் நன்றாக புறிகிறது நமது நகரில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் யாராவது நகர்மன்ற தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால் தயவு செய்து அதனை கைவிட்டு விடுங்கள். நல்லவன் என்ற பெயர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த நன்றிகெட்ட சிலர் நம்மை கெட்டவன் என்றாவது சொல்லாமல் இருந்தால் சரி என்றாகிவிடும். இதுதான் நம் ஊரின் நிலை.
அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்பதுதான் என் நிலை அதனையும் மீறி நான் தேர்தலில் போட்டியிட்டால் அது சிலரின் (பொய்யர்களின்) வெற்றியை தடுப்பதற்காகத்தான் இருக்கும். நான் அதில் வெற்றி பெறுவதற்காக இருக்காது.
8. நடுநிலை வாதிகளே நீங்கள் சொலுங்கள்.? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[22 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22377
மானமுள்ள உறுபினர்களில் மிக முக்கியமான உறுப்பினரின் தன்னிலை விளக்கம் - அறிக்கை மற்றும் பகிரங்க சவால் இவைகளை காணோமே... விரைவில் தன்னிலை விளக்கம் - அறிக்கைகளை வாசகர்கள் எதிர்பார்க்கலாமா...?
இந்த நோட்டீசில் அவதூறோ... பொய்யான செய்திகளோ... இருப்பின் இந்த உறுப்பினர்கள் துணிவோடு செய்ய வேண்டிய ஓரே காரியம் என்னவனில்.. நோட்டீஸ் அடித்தவரின் மீதும் அச்சடித்து கொடுத்த அச்சகத்தின் மீதும் (பொய் செய்தி கலந்து இருந்தால்) சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே... ஏன் தயங்க வேண்டும்......
தலைவியின் ஆதரவாளர்களோ... அல்லது மானமுள்ள உறுபினர்களின் ஆதரவாளர்களோ.. இவர்கள் இவர்களையும் தவிர்த்து... இந்த ஜனதா கட்சியின் நோட்டீசின் வாசகத்தை நடுநிலைவாதிகள் நன்கு சிந்திக்கட்டும்...
ஜனதா கட்சியின் நோட்டீசில் பொய் செய்திகளா...? நகரமன்ற கூட்ட நடைமுறை உண்மை செய்திகளா...? நடுநிலைவாதிகளே...! நீங்கள் பதியுங்கள் உங்கள் நடுநிலை கருத்தை மக்களுக்கு...!
நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் (தோல்வியை) அடிபட்ட காய புண்கள் ஆராதவர்களின் கருத்துக்கள் தான் இந்த இணையதளத்தில் அதிகம் உள்ளது... இந்த இணையதளம் எப்போதுமே தலைவிக்கு எதிரான கருத்துகளுக்கு முக்கியத்துவும் கொடுபதிலேயே தனது இணையதளத்தை நடத்துகிறதோ என்ற சந்தேகம் வருகிறது...
திருவாளர் 5வது வார்டு உறுப்பினர் ஜகாங்கீர் அவர்களின் தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்தவனாக விடைபெறுகிறேன்...
9. Re:... posted bysulaiman (abudhabi)[22 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22381
அஸ்ஸலாமு அழைக்கும்,
நமது நகராச்சி மன்ற தலைவி அவர்களும் ,அவரை இயக்குபவர்களும்,புகழ் பாடிகளும் தேர்தல் நேரத்தில் அதை செய்வோம்,இதை செய்வோம் என்று மக்களிடம் பில்ட்அப் கொடுத்து ஏமாற்றியதை போல இப்பவும் மக்களுக்கு கவுன்சிலர்கள் அதை செய்ய ஒத்துழைப்பது இல்லை ,இதை செய்ய ஒத்துழைப்பது இல்லை என்ற பில்ட்அப்பை தொடர்ந்து குடுத்துகொண்டு உள்ளார்கள்.
உண்மைலேய இவர்களுக்கு ஊரின் வளர்ச்சி மீதும் ,மக்கள் நலனின் மீதும் அக்கறை இருக்குமேயானால் ஏட்டு சுரைக்காய் ஆகிய இந்த வீடியோ பதிவு ,வெளியீடு ( இவர்கள் புதிய கண்டுபிடிப்பின் பிரகாரம் வெளிபடையான நிர்வாகம்!!! ) இந்த முடிவில் இருந்து விடுபடவேண்டும்.இந்த இவர்களின் வீடியோ பதிவு ,வெளீடு இதனால் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு எந்த பயனும் இல்லை.இதனால் ஏற்பட கூடிய பயன் நகராச்சி கூட்டத்தில் தலைவி நல்லவரா,கவுன்சிலர்கள் நல்லவரா,நான் சொல்லுவது சரியா,அவர்கள் சொல்லுவது சரியா இப்படியே சண்டை குழப்பங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டி நாட்களை கடத்துவதுக்கும்,செயல்படாமல் முடங்குவதுக்கும் தான் இது பயன் படும்.
பொதுவாகவே மனிதன் தவறு செய்ய கூடியவனாகத்தான் படைக்க பட்டுள்ளான்.தாங்கள் செய்கின்ற தவறு நான்கு சுவற்றுக்குள் சுருங்குமேயானால் அவன் தன்னை தானே சுய பரிசோதனை செய்து அடுத்து திருந்துவதுக்கான வாய்ப்பு உள்ளது.இந்த தவறு உலகு அறிய செல்லுமானால் தனது இம்மேஜ் தக்க வைப்பதுக்கும்,வறட்டு கவருவத்துக்கும் தான் செய்த தவறை நியாயபடுத்த முனைகிறான்(ஒரு சிலர் இதற்க்கு விதிவிலக்காக இருக்கலாம்).எனவே மக்களுக்கு எந்த வகைளும் பயனில்லாத இந்த வீடியோ பதிவு என்ற தனது வறட்டு பிடிவாதத்தில் இருந்து சகோதரி ஆபிதா அவர்கள் விடுபட்டு வெளியே வரவேண்டும்.மீதி இருக்கும் காலங்களிலாவது உறுபினர்களுடன் இணைந்தது நமது மக்களுக்கு நன்மைகள் செய்யவேண்ட்டும்.
14 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் மீதி இருக்கும் 4 உறுபினர்களையும்,தன்னை இயக்க கூடியவர்களையும்,புகழ் பாடிகளையும் வைத்து தலைவி அவர்கள் ஊருக்கு நல்லது செய்வரோ???நமது மக்களுக்கு நன்மைகள் ஏற்படுவதுக்கு 14 மற்றும் இல்லை 18 + 1 ம் ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை வருமேயானால் அதற்கும் தயாராக இருக்க வேண்ட்டும் .இப்படி பட்டவர்கள் தான் உண்மையான மக்கள் சேவகர்கள்,மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளை ஏற்று பொது வாழ்கையில் நுழைந்தவர்கள்ஆவார்கள்.
சகோதரர் மூசா காக்கா அவர்கள் தான் பொறுப்பு வகிக்கும் இந்த கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற வேண்ட்டும்,சமுதாய நன்மை நாடி இதை செய்வார்களா???
10. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[22 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22386
அஸ்ஸலாமு அலைக்கும்.
என் அருமை தம்பி .M.Jahangir அவர்களுக்கு.தங்களின் பதிலை நான் பார்தேன்.தங்களிடமும் நியாயம் இருக்கிறது. நான் முன்பு ஒரு தடவை தம்மை பற்றி தீர்க்க விசாரித்து தான்.தம் நேர்மை & தம் நேரத்தையும் / தாங்கள் தம் வார்டுக்காக தம் சொந்த பணத்தை கூட செலவு செய்து வருவதும்.நான் நன்கு அறிவேன். தம் மீது எனக்கும் சரி .தம் தொகுதி மக்களுக்கும் சரி முழுமையான நம்பிக்கை இருக்கிறது.தம் நேர்மையை குறை கூற வில்லை.
தம்முடைய இந்த வாசகத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன் '''' அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்பதுதான் என் நிலை அதனையும் மீறி நான் தேர்தலில் போட்டியிட்டால் அது சிலரின் (பொய்யர்களின்) வெற்றியை தடுப்பதற்காகத்தான் இருக்கும். நான் அதில் வெற்றி பெறுவதற்காக
இருக்காது........
தம்பி உன் நேர்மை & தம் தொகுதிக்காக நேர்மையுடன் உழைக்கணும் என்கிற எண்ணமும் தம்மிடம் உண்டு....தம் மீது முழு நம்பிக்கை எங்களுக்கும் உண்டு.....
நான் தம்மிடமும் & மற்ற உறுப்பினார்களிடமும் கேட்பது ஓன்று தான். தயவு செய்து நகர் மன்ற கூட்டதை நடத்தி நம் ஊருக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி.நம் ஊர் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.என்பது தான் ....
நீங்கள் இருவரும் ( தலைவி + மன்ற உறுப்பினார்கள் ) இப்படியே இருதுருவமாக இருந்து செயல்பட்டால். 5 வருஷம் என்ன ....10 வருஷமானாலும் கண்டிப்பாக நம் ஊருக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களும் வரவே வராது. தம்பி நீங்கள் இருவரில் யாராவது ஒருவர் மனது வைத்து இறங்கி போனால் தான்....நம் ஊருக்கு விடிவு பிறக்கும்.PLZ நம் ஊர் நலன் நாடுங்கள்.
நம் ஊர் வரி பணம் வேறு ஒரு நகர் மன்றத்துக்கு அரசு மூலம் போய் விட கூடாது என்பது தான்.பொது மக்களாகிய எங்களின் கவலை.வேறு ஒன்றும் இல்லை.
தம்பி எனக்கு உன்னையும் தெரியாது & நகர் மன்ற தலைவியையும் தெரியாது.....நான் உங்கள் இருவரிடமும் இன்று நாள் வரை பார்த்ததும் இல்லை....பேசியதும் இல்லை......எனக்கு தெரிந்தது ஓன்று மட்டும் தான் ....அதாவது நம் ஊருக்கு நல்லது நடக்கணும் ..உங்களின் பிரச்சனையால் பாதிக்க படுவது முழுக்க ....முழுக்க ....பொது மக்களாகிய நாங்கள் தானே ......அந்த கவலைதான்.
உங்கள் இருவரின் பிரச்சனைக்கு தீர்வுதான் என்னா???இப்படியே நீங்கள் இருவரும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கொண்டு இருந்தால்.தீர்வும் வராது ....இன்னும் 4 வருஷத்தில் நம் ஊருக்கு ஒன்றுமே நடக்காது.நம் ஊர் மக்கள் மத்தியில் உங்கள் இருவர் ( தலைவி / உறுப்பினார்கள் ) பெயரும் கேட்டு போய் விடும்.மக்களும் உங்கள் இருவரையும் நிச்சயமாக மன்னிக்கவே மாட்டார்கள்.
தம்பி .வீடியோ பதிவால் எந்த ஒரு பிரச்சனையுமே வராதுப்பா..... சட்ட சிக்கல்கள் வர என்னப்பா இருக்கிறது.நகர் மன்ற கூட்டத்தை நாங்களும் காண வாய்ப்பு இருக்கும் அல்லவா .....
தம்பி எனக்கு ....உண்மை நிலவரம் 100 % தெரிய வாய்ப்பு இல்லை.....நம் ஊருக்கு இந்த நகர் மன்றத்தால் 100 % நல்ல காரியங்கள் நடக்கணும்.இதை தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்.
தம்பி உன்னுடைய இந்த கேள்வியை நாங்கள் மறுப்பதற்கு இல்லை...... """" கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாங்கள் பெறும் பணம் 600 ரூபாய். ஆனால் மாதத்தின் மீதம் உள்ள 29 நாட்களும் நகராட்சிக்கு பொதுமக்களின் வேலைக்காக பைக்கிள் செல்வதற்கு பெட்ரோல் வகைக்கு இந்த 600 ரூபாய் போதுமா? அதற்கு மேலும் நாங்கள் எங்கள் கையில் இருந்து பணத்தை செலவலித்து மக்கள் பணியை செய்து வருகிறோம். இதற்கு நம்மை படைத்த இறைவன் சாட்சி.."""''.......நீங்கள் தங்களின் சொந்த கை பணத்தை தான் செலவு செய்வதும்....தெரியும்....
நம் நகர் மன்ற நிர்வாகம் ஒழுங்காக நடக்க முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்பது தான் எங்களின் கோரிக்கை........நீங்கள் இருவரும் ( தலைவி அவர்கள் / உறுப்பினார்கள் ) ஒரு பொது இடத்தில் சந்தித்து பேசினால் நல்ல முடிவு வர வாய்ப்பு உள்ளது அல்லவா .....
தங்கள் இருவரின் ஒற்றுமையை ஆவலோடு எதிர் நோக்கி காத்து இருக்கிறோம்.......
11. இட்லியுடன் கூடவே சட்னியையும் சேர்த்துகொள்.. அப்போது தான் (உனது கருத்துக்கு) சுவையாக இருக்கும்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[23 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22388
வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது இது ஒன்றும் தனியார் கம்பெனி வருமானத்தில் மாதம்.. ரூபாய் 600 ஊதியம் நீங்கள் பெறுவது கிடையாது எனது வரிபணத்தில் மாதம்.. மாதம்.. ரூபாய் 600 பெற்று வருகிறீர்கள்.. நாட்டின் பிரதமரும் கூட... அதை மறந்து விடவேண்டாம்.. நினைவு படுத்துகிறேன்... நகராட்சி என்ன...! அரசாங்கமே இயங்குவது மக்கள் வரிபணத்தில்..
வெளிப்படையான நிர்வாகதிர்காகவே நகர மன்ற நிகழ்வுகளை வீடியோ எடுக்க தலைவி கோருகிறார். பிறகு உங்களுக்கு ஏன் ஆட்சேபனை...? ஜனதா கட்சியின் பிரசுரத்திற்கு மறுப்பு.. அறிக்கை வெளியுட தயங்குவது ஏன்...? புனித ரமலானில் ஒரு இணையதளத்தை முடக்க காவல்துறைக்கு சென்று தோல்வியை கண்ட நீங்கள் இந்த ஜனதா கட்சியின் நோட்டீசுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட தலைமை காவல்துறைக்கு செல்லாதது ஏன்...?
இம்மாதம் நடக்க இருக்கும் நகரமன்ற கூட்டத்தில் நீங்கள் மக்கள் வரி பணத்தை முன்பு போல் (கூட்டம் நடைபெறாமலேயே) முன் கூட்டியே பணம் ரூபாய் 600 ரை வாங்கியது போல் இனி வாங்க முடியாது... கூட்ட படி ரூபாய் 600 கைநீட்டி வாங்கி விட்டாலே.. நீங்கள் செய்யும் வெளி நடப்பு செல்லாது... என்று நினைக்கிறேன்...
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (கூட்ட படி ரூபாய் 600 கைநீட்டி வாங்கி விட்டாலே.. நீங்கள் செய்யும் வெளி நடப்பு செல்லாது என்கிற) அதிகார பூர்வ தகவலை எதிர்பார்த்தவனாக விடைபெறுகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross