ஒவ்வொரு ஆண்டும் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் - ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று - சிறந்த மருத்துவர், சிறந்த ஆசிரியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என மூன்று விருதுகளை வழங்கி வருகிறது. இவ்வாண்டு வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருதினை பெற திருநெல்வேலியில் பணியாற்றி வரும் காயல் பூர்விக குழந்தைகள் மருத்துவர் டாக்டர் முஹம்மது தம்பி M.B., M.D. (Paed.), DCH தேர்வு செய்யப்பட்டார். இந்த விருது செப்டம்பர் 5 அன்று காலையில் ௦ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இந்த விருதினை தொடர்ந்து இணையதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த மக்களுக்கும், காயல் நல மன்றங்களுக்கும் தனது நன்றியினை டாக்டர் தம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்தாளும் வல்லிறையேகன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக!
ஸலவாத்தும், ஸலாமும் நம் உயிரினுமினிய உத்தம தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி பேணும் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்... பெருங்கொடையாளன் அல்லாஹ்வின் பேரருளால், சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் சார்பில் இவ்வாண்டு எனக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்டுள்ளது – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
நான் விருது பெற்ற நிகழ்வை செய்தியாக வெளியிட்டு, பொதுமக்களுக்கு தெரியப்படுத்திய பத்திரிக்கை மற்றும் இணையதளங்களின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகளுக்கும், அச்செய்திகளைப் பார்த்தறிந்துகொண்டு, எனக்கு நேரிலும் – தொலைபேசியிலும் – மின்னஞ்சல் மூலமும் – இணையதள செய்திகளின் கருத்துப் பகுதியிலும் வாழ்த்தி துஆ செய்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இதர பகுதிகளைச் சேர்ந்த என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
குறிப்பாக, நான் இவ்விருதைப் பெற்றதற்காக என்னை வாழ்த்தி துஆ செய்து தீர்மானங்கள் நிறைவேற்றிய உள்நாட்டு - வெளிநாட்டு காயல் நல மன்றத்தின் நிர்வாகிகள் – உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அங்கத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இவ்விருதைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட, உங்கள் யாவரின் மேலான துஆக்களையும், வாழ்த்துக்களையும் கண்டுதான் கூடுதலாக மகிழ்ச்சியடைந்துள்ளேன். எனது மருத்துவ சேவையை இன்னும் சிறப்புற செய்திட இந்த வாழ்த்துக்களும், துஆக்களும் எனக்கு பெரும் தூண்டுகோலாகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
தங்கள் யாவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை மீண்டும் தெரிவித்து நிறைவு செய்கிறேன் – ஜஸாக்குமுல்லாஹு ஃகைரா
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் |