சவுதி அரேபியா- தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 21 அன்று நடைபெற்றது. இது குறித்து - மன்றம் சார்பாக - வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
சவுதி அரேபியா- தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் 21.09.12 வெள்ளிக்கிழமை மாலை, சகோ. பாளையம் எம்.எஸ். சதக்கத்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில் வைத்து இனிதே நடந்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இந்த கூட்டத்தை அல்ஹாபிழ் இப்ராஹீம் அவர்கள் இறைமறை வசனத்தை ஓதி துவங்கிவைத்தார்.
அடுத்து, சகோ. கே.டி.பாதுல் அஷ்ஹாப் அவர்கள் அனைவர்களையும் வரவேற்று அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து, மன்றத்தலைவர் மருத்துவர். ஏ.எஸ். முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் நன்றியுரையுடன் கூடிய தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
அவர்களின் உரையில் வழமையான நகைச்சுவையுடன் கூடிய மருத்துவ விளக்க உரையும், மருத்துவ சந்தேகங்களுக்கு அருமையான தீர்வும் அமைந்து இருந்தது ஒரு சிறப்பான அம்சம்.
அதன் பிறகு மன்றத்தின் பொதுச்செயலாளர் சகோ. எஸ்.ஏ. அஹமத் ரபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அவர்கள் உரையில்,
இதுவரை நிகழ்த்திய நல உதவிகளையும், மன்றத்திற்கு வந்துள்ள புதிய விண்ணப்பங்களையும் பட்டியலிட்டு, தற்போதுள்ள சூழ்நிலையில் வெறும் சந்தா பணத்தை வைத்து உதவிகள் அதிகம் செய்ய முடியவில்லை என்றும், சந்தாக்களை அதிகரித்தும், உங்களின் சதக்கா போன்ற உதவிகளை மன்றத்திற்கு வழங்கி ஒத்துழைக்குமாறும் வேண்டினார்.
மேலும், நம் மன்றத்தின் சார்பாக
* மிகவும் எழ்மை நிலையில் இருக்கும் மக்களின் வீடுகளை பராமரிக்கும் திட்டமும்,
* நம் மாணவர்களின் அறிவை வளர்த்து, புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவரவும், அவர்களை ஊக்குவிக்கும் முகமாக “அறிவியல் கண்காட்சி” நிகழ்ச்சியும்,
* நம் மக்களை நோய்களில் இருந்து காக்கும் முகமாக, மருத்துவ முகாமும்,
* நோன்பு காலங்களில் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு, உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டமும், வழமையாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்வுகளை எல்லாம் “ஸ்பெஷல் ப்ராஜெக்ட்” என்று நம் மன்ற சகோதரர்கள் சிலரால் மிகவும் அருமையாகவும் சிறப்பாகவும் நடந்து வருகின்றது, அல்ஹம்து லில்லாஹ். இந்த ஸ்பெஷல் ப்ராஜெக்ட்டிலும் மன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் வேண்டுகோள் விடுவித்தார்.
அதனை தொடர்ந்து, அண்மையில் நம் மன்றத்தால் வெற்றிகரமாக நடந்து முடிந்த அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியின் விபரங்களை, சகோ. இம்தியாஸ் அவர்கள் விவரித்தார்கள்.
தம்மாம் பகுதிக்கு பணி நிமிர்த்தமாக வந்துள்ள நான்கு சகோதரர்கள்,
** சகோ. ஐ. நவீத் ஹசன்
** சகோ. ஹாபிழ். இப்ராஹீம்
** சகோ. எம். எஸ். மஹ்மூத் ரஜ்வி
** சகோ. செய்யத் இஸ்மாயில்
ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்தி, மன்றத்தில் இணைந்தார்கள்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்.
* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருதினை பெற்ற பிரபல குழந்தைகள் மருத்துவர்,மரியாதைக்குரிய டாக்டர் முஹம்மது தம்பி MD(Pead),DCH அவர்களுக்கு எம் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினையும் ,மேலும் அவர்கள் மன நிம்மதியுடன், நீண்ட நாட்கள் வாழ்ந்து மேலும் பல சாதனைகள் புரிந்து, இன்னும் வரக்கூடிய தலைமுறைகளுக்கு முன்திரியாக திகழ வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகின்றோம்.
* ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர், மரியாதைக்குரிய ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல மனிதரை இழந்து நிற்கும் காயல் மக்களுக்கும், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) அங்கத்தினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்து, அவர்களுக்காக அனைவரும் வல்ல இறைவனிடம் துஆ இறைஞ்சினார்கள்.
* இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் தலைவர் அவர்களின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, அதில் இளம் பெண்களுக்கு மிக இன்றியமையாத ருபெல்லா (ஜெர்மன் தட்டம்மை) தடுப்பூசி போடுவது பற்றி முடிவு செய்யப்பட்டது.
* இறைத்தூதர் நபிகள் நாயகத்தைக் கேலி செய்து திரைப்படம் எடுத்தவர், அதற்கு ஒத்துழைத்தவர்கள், அவர்களைக் கண்டிக்காத அமெரிக்க அரசு - ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.
* இந்த கல்விப்பருவத்திற்கு உண்டான இக்ரா உடைய ஸ்காலர்சிப் 14 மாணவர்களுக்கு தேவை இருப்பதால், இந்த 14 மாணாக்களின் உதவித்தொகையை மன்ற உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்று, முதல் வருட உதவியை வழங்கினார்கள்.
* கல்விக்காக மன்றத்திற்கு வந்துள்ள ஏழு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டது.
* மருத்துவத்திற்க்காக வந்துள்ள இரண்டு விண்ணப்பங்கள் (ஒன்று தொடர் மருத்துவ உதவி) அங்கீகரிக்கப்பட்டன.
இறுதியில் துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத்தலைவர், தம்மாம் காயல் நற்பணி மன்றம்,
தம்மாம் - சவுதி அரேபியா. |