இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியர்களுக்கு ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:
<> தடை செய்யப்பட்ட எல்லா வகையான போதை பொருட்களையும் சவுதி அரேபியாவில் பயணம் செய்யும் போது கொண்டுசெல்லக்கூடாது
<> ஹரம் ஷரீப் போன்ற கூட்டம் நெரிச்சலான இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது - குறைந்தளவு பணமும், குறைந்தளவு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டு செல்லுங்கள்
<> டாக்சீயில் பயணம் மேற்கொள்ளும்போது கவனம். தனியாக பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். டாக்சியின் பதிவு எண்ணை - பயணம் மேற்கொள்ளும்போது - குறித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்
<> பெண்கள் தங்கள் மெஹ்ரம்-உடன் தான் பயணம் செய்யவேண்டும். தனியாக வெளியே செல்லக்கூடாது. பெண்களுடன் டாக்சீயில் பயணம் செய்யும் போது - ஆண்கள் தான் முதலில் வண்டியில் ஏறவேண்டும். மேலும் ஆண்கள் தான் இறுதியாக வண்டியில் இருந்து இறங்க வேண்டும். பெண்களை தனியாக வண்டியில் விடாதீர்கள்
<> அறியா நபர் தரும் எந்த உதவியையும் நீங்கள் நாடாதீர்கள். சில நேரங்களில் - தங்களின் நம்பிக்கையை பெற்றப்பின் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் நடந்துள்ளன
<> உங்கள் உடமைகளை தனியாக விட்டு எங்கும் செல்லாதீர்கள். மேலும் - யார் கொடுக்கும் பைகளையும், அதில் உள்ள பொருள் என்ன என அறியாமல் வாங்காதீர்கள்
<> ஹரம் ஷரிபில் கேட்பாரற்று பொருட்கள் காணக்கிடைப்பின் அவற்றை தொடாதீர்கள். ஹரம் ஷரீபில் CCTV காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உங்களை சாரா பொருட்களை நீங்கள் எடுத்தால் - கைதாகும் சூழல் ஏற்படும்
<> ஹரம் ஷரீபிற்கு செல்லும்போது தங்கள் உடமைகளை தங்களுடனே வைத்திருங்கள்
<> உங்கள் அலைப்பேசிக்கு வரும் மோசடி அழைப்புகளுக்கோ, குறுந்தகவல்களுக்கோ ஏமாந்து விடாதீர்கள்
<> உங்கள் பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்களின் நகலை (Xerox) உங்களுடன் எப்போதும் வைத்திருங்கள்
<> எவரின் வற்புறுத்தலின் பெயரிலும் எந்த தனியார் வாகனத்திலும் அமராதீர்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross