காயல் நகர ஹாஜிகளுக்கு சேவை மற்றும் வழிகாட்டும் பொருட்டு - ஜித்தா காயல் நல மன்றத்தின் மக்கா-காயல் ஹஜ் சேவை மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் தன்னார்வ வழிகாட்டி எனும் சிறிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் காயல் நகர ஹாஜிகளுக்கு சேவை மற்றும் வழிகாட்டும் பொருட்டு எங்கள் ஜித்தா காயல் நல மன்றத்தின் மக்கா-காயல் ஹஜ் சேவை மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் தன்னார்வ வழிகாட்டி எனும் சிறிய கையேடு ஒன்றை இன்ஷா அல்லாஹ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் இருக்கும் ஹாஜிகளின் வசதியை கருத்தில் வெளியிட்டு நமதூரில் விநியோகம் செய்து இருக்கிறோம்.
இணையதள பார்வையாளர்கள் வசதிக்காக இங்கே அந்த கையேட்டில் பிரதியை PDF வடிவில் இங்கே தந்துள்ளோம். வாசகர்கள் இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்து பார்த்து கொள்ளலாம். ஹஜ் வரவிருக்கும் உங்கள் அன்பர்கள் உறவினர்களுக்கும் இந்த செய்தியை எடுத்து கூறவும்.
இந்த கையேடு மக்காவில் தங்கி இருக்கும் காலகட்டங்களில் ஹாஜிகளின் சிரமத்தைப் போக்கவும், இடையூறுகளைத் தவிர்க்கவும் ஓர் அழகிய வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம். அல்லாஹ் நம் அமல்களை சீராக்கி, நம் அனைவரின் நன்மையான நாட்டங்களையும் நிறைவேற்றி வைப்பானாக! ஆமீன் !!
இறைபொருத்தத்தை மட்டுமே நாடி செய்யும் இப்பணியில் ஏதும் குறை இருப்பின் அல்லாஹ்விற்காக பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்!!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: ஜித்தா காயல் நல மன்றம்,
ஜித்தா, சவுதி அரேபியா.
1. Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[26 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22426
இறைபொருத்தத்தை மட்டுமே நாடி மக்காவில் தங்கி இருக்கும் காலகட்டங்களில் ஹாஜிகளின் சிரமத்தைப் போக்கவும், இடையூறுகளைத் தவிர்க்கவும் ஓர் அழகிய வழிகாட்டியாக இந்த கையேடை ,[ஹாஜிகளுக்கு தன்னார்வ வழிகாட்டி எனும் கையேடு] ஜித்தா காயல் நல மன்றத்தின் மக்கா - காயல் ஹஜ் சேவை மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பாக வெளிஇட்டு இருப்பது மாஷா அல்லாஹ் ! மிகவும் போற்று தல்குரிய விஷயம் .வல்ல அல்லாஹ் உங்களின் இந்த புனிதமான சேவையை ஏற்று அழகிய நற்கூளியை என்றென்றும் தந்துக்கொண்டே இருப்பானாக ஆமீன் !
இது போன்ற நல்ல நல்ல விஷயங்களில் மென்மேலும் அல்லாஹ் உங்கள் பணியை தொய்வின்றி தொடர வைப்பானாக ஆமீன் !இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் காயல் நகர ஹாஜிகளுக்கும் இன்ஷா அல்லாஹ் !இனிவரும் ஹாஜிமாருகளுக்கும் மிக மிக பயனுள்ளதாக அமைய துஆவுடன் கூடிய எனது வாழ்த்துக்கள் !!...
2. Re:PAMPLET posted byNIZAR AL (kayalpatnam)[26 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 22427
JEDDAH KAYAL WELFARE ASSOCIATIONS THIS NEW TRY WILL BE VERY VALUABLE ALSO USEFUL TO THE HAJIS FROM KAYAL AND ALSO OTHER TAMIL HAJJS.THE IMPACT OF THIS SERVICE WILL KNOW AFTER THE HAJPILIGRIME. SO WE SHOULD APPRICIATE ALL MEMBERS OF JEDDAH KAYAL ASSOCIATION.INSHALLAH ALLAH WILL MAKE ALL THINGS WOULD BE POSSIBLE AND SUCCESSFUL.
4. Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[26 September 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22429
இவள்ளவு நல்ல காரியம் புரியும் ஜித்தா காயல் மன்றத்துக்கு இறைவன் நல்லருள் புரிவானாக அமீன். ஹாஜி மார்களும் நல்ல கவனத்துடன் இவர்கள் சொன்ன அர்யுறைகளை மனதில் வைத்து நடந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு துவா செய்யவும். நமது ஊருக்கு உலகில் உள்ள நமது காயல் மன்றங்கள் பல பல உதவிகள் புரிகிறது. ஆனால் காயல் நகர் மன்றம் இது வரை ஒன்றும் செய்ய வில்லை செய்ய விடுவதில்லை. இவர்களை இறைவன் மாற்றுவான் நமது ஊரும் நல்லபடி மாறும் இன்ஷால்லாஹ்.
5. Re:... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[26 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22431
Greetings.
First of all my appreciation to our Jeddah KWA members. Their advice is really valuable and also very useful for all pilgrimages.They should adopt such a nice advice and aslo teach other pilgrimages mainly it emphasized safety.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross