இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொள்ள உள்ள 1,25,000 யாத்திரிகர்களுக்கு கூட்டு காப்பீடு (COMPREHENSIVE INSURANCE POLICY) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் முடிவு செய்யப்பட்ட இந்த திட்டத்தினை - Oriental Insurance Company (OIC) என்ற காப்பீடு நிறுவனம் நடைமுறைபடுத்த உள்ளது. ஒவ்வொரு யாத்திரிகர்கள் சார்பாக ப்ரீமியம் தொகையாக ரூபாய் 130 வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த தொகை ரூபாய் 160 என இருந்தது.
இந்த காப்பீடு திட்டம் மூலம் ஐந்து வகையான இழப்புகளுக்கு - இழப்பு தொகை வழங்கப்படும். அவைகள் வருமாறு:
1) விபத்து, தீ, நெருக்கடி, தீவிரவாத செயல் மூலமாக ஏற்படும் மரணங்கள்
2) விபத்து மூலமாக தற்காலிக/நிரந்தர - முழுமையான முடக்கம்
3) ரொக்கப்பணம் தொலைந்து போனது
4) உடமைகள் தொலைந்து போனது
5) நோய்வாய்ப்பட்ட யாத்திரிகர்களை - வீல் சேர் மூலமோ/ ஸ்ட்ரெட்சர் மூலமோ - இந்தியாவுக்கு (தேவைப்பட்டால் உதவியாளருடன்) அழைத்து வர
காப்பீடு பாதுகாப்பு - செப்டம்பர் 17 முதல் (முதல் விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்ட நாள்) டிசம்பர் 2 வரை (கடைசி விமானம் சவுதியில்
இருந்து புறப்படும் வரை) வழங்கப்படும். இருப்பினும் - யாத்திரிகர்களை பொறுத்தவரை அவர்கள் சவுதியில் இருக்கும் 45 நாட்கள் மட்டுமே
கணக்கில் எடுக்கப்படும்.
1) விபத்து, தீ, நெருக்கடி, தீவிரவாத செயல் மூலமாக ஏற்படும் மரணங்கள்
2) விபத்து மூலமாக தற்காலிக/நிரந்தர - முழுமையான முடக்கம்
3) ரொக்கப்பணம் தொலைந்து போனது (1200 நபருக்கு மட்டும்)
4) உடமைகள் தொலைந்து போனது (100 நபருக்கு மட்டும்)
500 சவுதி ரியால் அல்லது இழந்த உடமையின் மதிப்பு - இரண்டில் எது குறைவோ
5) நோய்வாய்ப்பட்ட யாத்திரிகர்களை - வீல் சேர் மூலமோ/ ஸ்ட்ரெட்சர் மூலமோ - இந்தியாவுக்கு (தேவைப்பட்டால் உதவியாளருடன்) அழைத்து வர (20 நபருக்கு மட்டும்)
இந்தியாவுக்கு கொண்டுவர ஆகும் முழுமையான செலவு தொகை |