இந்திய அரசாங்கம் மஹரம் ஒதுக்கீடு (Meharam Quota) அடிப்படையில் - இந்திய ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொள்ள - 400 இடங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்குகிறது. சமீபத்தில் வெளியான இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்பினை தொடர்ந்து - அந்த இடங்கள் தற்போது பொது ஒதுக்கீடுக்கு (General Quota) வழங்கப்பட்டுள்ளது. 19 மாநிலங்கள் - 400 இடங்களை, மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை அடிப்படையில் - தற்போது பங்கிட்டுகொள்ளும்.
இதன் மூலம் - தமிழகத்தில் இருந்து விண்ணப்பம் செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 15 பேருக்கு - ஹஜ் பயணம் மேற்கொள்ள - வாய்ப்பு கிடைக்கும்.
1. அல்ஹம்ந்து லில்லாஹ்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், ( புனித மக்கா. )[28 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22495
புனித ஹஜ்ஜை மேற்கொள்ளுவதற்காக நாடு முழுவதிலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்து கூடுதலாக 400 பேருக்கு இந்த மகத்தான வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக் குரியதே! அடடா! இந்த வருஷம் கைகூடாமெ போயிடுச்சேன்னு ஆதங்கப் பட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அன்பளிப்பு என்று கூட சொல்லலாம்.
ஹஜ் மற்றும் அதனைச் சார்ந்த செய்திகளயும், தகவல்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்து அறிய தந்து கொண்டிருக்கும் காயல்பட்டணம் டாட் காம் இணையதளத்திற்கு நன்றி! உங்கள் மகத்தான இந்த சேவைகளை அல்லாஹ் அங்கீகரித்தருள்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross