புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்ப கட்டணம் - அக்டோபர் 1 முதல் உயர்த்தப்படுகிறது. தற்போது - சாதாரணம் வழியில் பாஸ்போர்ட் பெற கட்டணம் ரூபாய் 1000 வசூல் செய்யப்படுகிறது. இனி இது 1500 ரூபாய் என உயரும். தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற தற்போது கட்டணம் ரூபாய் 2500 பெறப்படுகிறது. இனி இது 3500 ரூபாய் என உயரும்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற இது வரை - 40 டாலர் அல்லது 48 யூரோ செலுத்திவந்தனர். இனி - 75 டாலர் அல்லது 60 யூரோ செலுத்தவேண்டும்.
1992 முதல் 300 ரூபாயாக இருந்த இந்த கட்டணம் 2002 முதல் 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க ஆகும் மூல செலவு உயர்ந்திட்ட காரணங்களால் - தற்போது விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் - புதிய பாஸ்போர்ட் வழங்கும் மையங்கள் புதிதாக தற்போது திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1. டாலர் யூரோ posted byriyaz sh (hongkong)[29 September 2012] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 22506
டாலர் 40 யூரோ 48 சரியான கட்டணமாக விளக்கமாக தெரியல, யூரோ மதிப்பு கூடுதல் டாலரை விட. ப்ளீஸ் செக் அண்ட் அப்டேட். ......
Administrator: மீண்டும் சரி பார்க்கப்பட்டது. செய்தி நிறுவனங்கள் தகவல் அடிப்படையிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. டாலர் 40 யூரோ 48 என்பது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டாலர் - யூரோ விகிதம் வேறாக இருந்தது என்பதனை கருத்தில் கொள்ளவும்
2. Re:...கட்டணம் பெரிதல்ல கஷ்டம் தான் பெரிது posted bymackie noohuthambi (kayalpatnam)[29 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22507
பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டணம் உயர்த்தியதை பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.
ஆனால் பாஸ்போர்ட் பெறுவதற்கு உள்ள சட்டங்கள். சிவப்பு நாடா முறைகள்-- அதனால் மக்கள் படும் கஷ்டங்கள் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதுதான் வேதனையான விஷயம். பாஸ்போர்டுக்கு மனு செய்ய ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு கட்டமாக மக்கள் படும் இம்சையை மாறு வேடத்தில் வந்து ஒரு அதிகாரி கண்காணித்தால் தெரியும் என்ன நடக்கிறது என்று.
வெளிநாடுகளில் பாஸ்போர்ட் எடுப்பது என்பது ஒரு செய்தியே அல்ல. ஆனால் இங்கு பாஸ்போர்ட் ஆபீசுக்கு பலமுறை அலைய வேண்டும்.போலீஸ் விசாரணை என்று ஒன்று, அது முடிந்து அந்த மனு தூத்துக்குடி எஸ்பி ஆபீசில் பல மாதங்கள் சிறையில் இருப்பதுபோல் இருந்து ஜாமீனில் விடுதலையாகி நெல்லை பாஸ்போர்ட் ஆபீஸ் போகும். சிலர் பாஸ்போர்ட் சீக்கிரம் வரவேண்டும் என்று நேர்த்திகடன் வைக்கிறார்கள். இந்துக்கள் தேங்காய் உடைக்கிறார்கள். சிலர் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்கிறார்கள்.
TRAVEL AGENT டுக்கு பணம் கொடுப்பதில் ஆரம்பித்து. போலிசுக்கு லஞ்சம் தூத்துக்குடி ஆபீசுக்கு லஞ்சம்.... என்று லஞ்சங்களும் தொடர்கின்றன. பாஸ்போர்ட் ஆபீஸ் தனியாரிடம் ஒப்படைத்தபின் தலைவலி நீங்கி திருகு வலி வந்த கதையாகி விட்டது. இந்த இணைய தள நண்பர் ஒரு புள்ளியியல் எடுத்து பாருங்கள். அதை மத்திய அரசின் கவனத்துக்கு அனுப்பி வையுங்கள். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு அரசு அதிகாரிகள் செய்யும் அட்டகாசங்கள் அடக்கு முறைகள் சொல்லி மாளாது.இன்னும் இதை பற்றி விரிவான கட்டுரை எழுதவிருக்கிறேன்.எழுதி என்ன செய்ய என்ற விரக்தியும் வருகிறது.
அரசு அலுவலகங்களில் சாதாரண பிறப்பு இறப்பு சான்றிதழ் முதல் கூப்பன், அடையாள அட்டை என்று எதை எடுக்கபோனாலும் அலைச்சல் திரிச்சல். இந்த கொதிக்கும் வெயில் வேறு.....சாமான்யர்கள் மட்டுமல்ல பணம் படைத்தவர்களும் திணறுகிறார்கள்.௬௫ வருடம் ஆகிவிட்டது சுதந்திரம் கிடைத்து, இலகுவாக பாஸ்போர்ட் கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ......
இந்த வெரிஃபிகேஷன்ங்கிற பெயர்லெ பச்சப் புள்ள முதல் பருவ மக்கையர் இன்னும் பெரியவர்,சிறியவர் அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு...அய்யய்யோ ரூட்டு மாறிட்டேன்...சாரி! இப்படி அனைவர்களும் காவல் நிலையத்தில் காத்துக் கிடக்க அய்யா (ரவுண்ட்)ஸ்லெ இருக்காரு! அம்மா(மேடம்) கேஸ் விஷயமா வெளியெ போயிருக்காங்க...ரென்ண்டு நாள் கழிச்சு வாங்க! அப்படியே வந்தாலும் காத்தோ காத்துன்னு காத்திருந்து கடைசியிலெ தரிசணம் கிடைக்கப் போகும் போது அங்கே உள்ளவங்க பண்ணுற ரவுசு இருக்கே...அப்பப்பா...சொல்லி மாளாது.
தள்ளி நில்லுங்க நீங்க யாரு? செருப்பு போட்டுட்டு உள்ளே வராதீங்க (அது என்ன சன்னிதானமா?). ஓரமா நில்லுங்க.ஒரு வேளை நம்ம காதுலெ விழலன்னா அவ்ளோதான் ஒரு அக்யூஸ்ட பாக்குற மாதிரி முறக்கிறது.இதுலெ கொடுமை என்னன்னா? அய்யவை அல்லது அம்மாவை பார்க்கிறதுக்கு பாஸ்போர்ட் வெரிஃபிக்கேஷனுக்காக நாம ஒரு க்யூலெ நிற்போம்! அடி, தடி, கஞ்சாக் கேஸுன்னு அந்தப் பக்கம் ஒரு க்யூ நிற்கும்!
நல்ல குடும்பத்துலெ உள்ளவர்கள் போலீஸ் ஸ்டேஷனையே வாழ்நாளில் பார்க்கதவர்கள் நாடி நரம்புகள் கூனிக் குறுகி நிற்கும் கொடுமையை நான் பல முறை பார்த்திருக்கின்றேன். இதற்கோர் மாற்று வழி பிறக்காதா...? நீங்க பாஸ்போர்ட்டுக்கு விலைய ஏத்துனாலுமோ? பப்படத்துக்கு விலையை ஏத்துனாலுமோ? நாங்க படுற பாட்டுக்கு ஒரு வழியெச் சொல்லுங்க...சாமி...!
-ராபியா மணாளன்.
5. பாஸ்போர்ட் கட்டணம். posted byLandmark Ravanna Abulhasan Haji (Dubai.)[30 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22535
கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சரியாஹா அறிந்து எழுதியதாஹா தெரியவில்லை. தற்பொழுது பாஸ்போர்ட் முன்னர் மாதிரி எந்த கஷ்டமும் இல்லை. தொல்லையும் இல்லை. ஏஜண்டுக்கு பணம் கொடுக்க தேவை இல்லை. ஆன்லைனில் அப்பாயின்ட் எடுக்கலாம். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் ஒரு ப்ரௌசெர் சென்டர் போய் 20 ருபாய் கொடுத்து எடுக்கலாம்., அப்போஇன்ட் date இல் நெல்லை பாஸ்போர்ட் ஆபீஸ் போனால் கால் மணி நேரத்தில் renewal பண்ணலாம். அந்த அண்டே பாஸ்போர்ட் போஸ்ட் செய்யப்பட்டு அடுத்தநாள் கிடைக்கிறது. பாஸ்போர்ட் inquiry 15 நாட்கள் பின் வருகிரர்ஹள்.
புதிதாஹா எடுக்க நெல்லை பாஸ்போர்ட் ஆபீஸ் இல் அரை மணி நேரம் ஆஹிறது. பாஸ்போர்ட் வருவதற்கு ஒன்டோரை மாதம் ஆஹிறது. போலீஸ் verification போலீஸ் ஸ்டேஷன் போகணும் என்பது தற்போது இல்லை. எனவே பாஸ்போர்ட் பீஸ் ய் தவிர எந்த எக்ஸ்ட்ரா செலவோ அலைச்சலோ கிடையாது. ஆனால் 2 ID (ELECTION கார்டு பேங்க் PASSBOOK DRIVING லைசென்சே) பிறந்த செர்டிபிக்டே +2 மார்க் சீட் TC வைத்து கொள்ளுங்கள். எல்லாம் சரி எண்டால் மிஹா எளிது. கமெண்ட் எழுதுபவர்கள் தெரிந்து எழுதவும்.
6. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[30 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22547
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பாஸ்போர்ட் எடுப்பது ரொம்பவும் ஈஸி என்று.சொல்லுவது எல்லாம் சரி இல்லை.நான் இப்போது என் மகளாருக்கு ரினிவல் பண்ணினேன்.ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருந்தது.அதுவும் பழைய பாஸ்போர்டில் விசா ஏற்றி...இறக்க பட்டு இருந்தது.அப்படி இருந்தும் ரினிவல் ஆகி புது பாஸ்போர்ட் வரவே கடுமையான கஷ்டமாகி விட்டது.( 4 1 / 2 மாதமாகியது.) காரணம் என்ன வென்றே புரிய வில்லை.பாஸ்போர்ட் ஆபீஸ் அதிகாரிகளும் கூட சரியான பொறுப்பான பதில் சொல்வது இல்லை.அதான் நம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது .நம் ஊர் கோஷா பெண்கள் எப்படி துணை இல்லாமல் ஒரே திருநல்வேலி போய் வருவார்கள்.எப்பதான் இதற்கு நல்ல முடிவு வருமோ .....அல்லாஹ் அறிவான் .......
நெட்டு (ஆன்லைனில் ) / நேரில் செல்வது என்பது எல்லாம் சும்மா ......தக்கலில் போட்டு எடுத்தாலே இரண்டு மாதத்துக்கு மேல் ஆகிறது.
நம் மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டது.பற்றி நாம் எந்த ஒரு குறையும் சொல்வதற்கு இல்லை.ஆனால் பொது மக்களை கஷ்ட படுத்துவது தான் சரி இல்லை.காவல் துறையும் பணம் வாங்கி கொண்டு தானே.பாஸ்போர்ட் விசியதில் செயல் படுகிறது.இதற்கு எல்லாம் ஒரு முடிவும் வராதா என்ன ?
இப்போது ஹஜ்ஜிக்கு கூட பாஸ்போர்ட் தேவை ....அப்படி இருக்க. நம் மத்திய அரசாங்கம் வயதானவர்களுக்கு பாஸ்போர்ட் விஷயதில் கவனம் செலுத்தி மக்களுக்கு ஈஸியாகலமே......
படித்தவர்களையே இப்படி பாஸ்போர்ட் ஆபீஸ் அதிகாரிகள் அலைகழிக்கும் போது....படிக்காத ....பாமர மக்களை எப்படி இவர்கள் சிரம படுத்துவார்களோ ..... பொது மக்களுக்கு கொஞ்சமும் சிரமமே இல்லாமல் பாஸ்போர்ட் கிடைக்க மத்திய அரசு வழி செய்தால் ...மக்களுக்கு நல்லது .......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
7. The other way around posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[30 September 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 22550
" Administrator: மீண்டும் சரி பார்க்கப்பட்டது. செய்தி நிறுவனங்கள் தகவல் அடிப்படையிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. டாலர் 40 யூரோ 48 என்பது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டாலர் - யூரோ விகிதம் வேறாக இருந்தது என்பதனை கருத்தில் கொள்ளவும்" (Copy & Paste)
யுரோ பேப்பர் நோட்டாக மக்கள் புழக்கத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்து (1 Euro = 1.17 U.S. dollar) இன்றுவரை (1 Euro = 1.2860 U.S.dollar) யுரோ மதிப்பு யு.எஸ் டாலரை விட அதிகமாகவே இருந்துவருகிறது.
செய்திநிறுவனங்கள் தவறுதலாக 40 டாலர், 48 யுரோ என்று தவறுதலாக செய்தி வெளியிட்டிருக்கலாம்.
It should have been the other way around.
Administrator: 10 Years ago, on 1-1-2002, 1 Euro was equal to 0.88 dollar. Today (30-9-2012), 1 Euro is equal to 1.28 dollar. On 26-10-2000, 1 Euro was equal to 0.82 dollar. So years ago, 40 Dollar being nearly equal to 48 Euro (1 Euro = 0.82 Dollar) does make sense
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross