இந்திய ரயில்வே - உயர்தர ரயில்வே டிக்கெட்களுக்கு சேவை வரி (Service Tax) விதிக்கவுள்ளது. அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படவுள்ள இந்த திட்டம் - ஏ.சி. முதல் வகுப்பு, Executive Class, ஏ.சி. இரண்டாம் வகுப்பு, ஏ.சி. மூன்றாம் வகுப்பு, ஏ.சி. சேர் கார், ஏ.சி. Economy வகுப்பு, முதல் வகுப்பு - ஆகிய ஏழு பிரிவுகளுக்கு பொருந்தும்.
மொத்த டிக்கெட் கட்டணத்தில் 30 சதவீதம் - சேவை வரிக்காக கணக்கில் எடுக்கப்படும். அதாவது - டிக்கெட் விலை 1000 ரூபாய் என்றால் - வரி, 300 ரூபாய் மீதே விதிக்கப்படும். 300 ரூபாயில் 12 சதவீதம் சேவை வரியும், சேவை வரி மீது 2 சதவீதம் கல்வி வரியும், 1 சதவீதம் உயர் கல்வி வரியும் - என 3.708 சதவீத அளவில் வரி விதிக்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் - சேவை வரியினை, பயணியர் - சேவை வரி அதிகாரிகளிடம் இருந்தே பெற வேண்டும். ரயில்வே நிர்வாகம் அந்த தொகையினை வழங்காது.
அக்டோபர் 1 முதல் பயணம் மேற்கொள்ள முன்னரே பதிவுசெய்யப்பட்ட டிக்கெட்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது - அக்டோபர் 1 முதல் பதிவு செய்யப்படும் டிக்கெட்கள் மீதே இந்த வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |