செப்டம்பர் 7 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - சமூக பார்வையாளர் N.S.E. மஹ்மூத் - "குடிநீரும், குழம்பிய மக்களும்!" என்ற தலைப்பில் எழுத்து மேடை கட்டுரை வெளியிட்டிருந்தார்.
நகரின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருத்துப்படும் குடிநீர் விநியோகத்தை அடிப்படையாக கொண்ட அந்த கட்டுரையை தொடர்ந்து, இவ்விசயம் குறித்து பதிவு செய்யப்படும் - ஆக்கப்பூர்வமான கருத்துகளில் சிறந்து கருத்து ஒன்றிற்கும், எழுத்தாளரே ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக தெரிவித்திருந்தார். சிறந்த கருத்தினை தேர்வு செய்துள்ள எழுத்தாளர், அது குறித்து செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மூன்று வாரங்களுக்கு முன்பு "குடிநீரும், குழம்பிய மக்களும்!" என்ற தலைப்பில் வெளியான என்னுடைய கட்டுரைக்கு கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் நன்றியும், ஸலாமும் உண்டாவதாக.
இந்த கட்டுரைக்கு வந்த கருத்துக்களில் சிறந்த கருத்தாக சகோதரர் சுலைமான் (அபுதாபி) (Comment Reference No: 21977) அவர்களுடைய கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த கட்டுரையின் நோக்கம் மக்களின், கஷ்டமும், சிரமமும் நீங்க வேண்டும் என்பதும் தவறு செய்யும் மக்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்பதும்தான்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்கு நூற்றுக்கும் அதிகமான கருத்துக்கள் (ஆலோசனைகள்) பல விதத்திலும் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மூன்று வாரங்கள் ஆகியும் 970 பார்வையாளர்கள் , பார்வையிட்டும் வெறும் பதினெட்டு கருத்துக்களே பதிவாயின. அதுவும் கட்டுரை வெளியான 4 நாட்களில் 18 கருத்துக்கள் வந்ததோடு நின்றுவிட்டது - அதன் பிறகு ஒரு கருத்துக்கூட வரவில்லை.
என்னுடைய பண பரிசு ஓர் ஆயிரம் பெற வேண்டும் என்பதற்காக அதிகமான கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை - அது ஒரு பெரிய தொகையுமல்ல. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் ஊரின் நலத்தில் வாசகர்களின் (மக்களின்) அக்கறை எப்படி? எந்த விதத்தில் ஒவ்வொரு செயலையும் எதிர்நோக்குகிறார்கள் என்பதை அறிய வேண்டிதான்.
இவ்வாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். |