| 
  விருத்தாச்சலம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் வள்ளுவனுடன் காயல்பட்டினம் நகர பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - காயல்பட்டினம் கிளையின் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 07ஆம் தேதியன்று நடத்திட அதன் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- 
  
கடந்த 15.07.2012 ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் துளிர் கேளரங்கில் நடைபெற்ற - “ஊழலற்ற காயலை நோக்கி - TOWARDS CORRUPTION-FREE KAYAL“  நிகழ்ச்சியின்போது,  ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை துவக்கப்பட்டது. 
   
இவ்வமைப்பின் சார்பில், 29.09.2012 சனிக்கிழமையன்று இரவு 07.00 மணியளவில், அமைப்பின் தலைவர் ஹிதாயா அப்துர்ரஹ்மான் தலைமையில், காயல்பட்டினம் கடற்கரையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 
  
 
  
 
  
அக்கூட்டத்தில், கடந்த முறை (2001 - 2006) விருத்தாச்சலம் நகர்மன்றத்தில் நேர்மையான நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு, தவறுகளை தானும் செய்யாமல் - பிறரையும் செய்ய விடாமல் 5 ஆண்டு பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்த கண் மருத்துவ பேராசிரியர் வள்ளுவன் அவர்களை, வரும் அக்டோபர் 07ஆம் தேதியன்று காயல்பட்டினம் வரவழைத்து, நகர பொதுமக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்புற நடத்திட தீர்மானிக்கப்பட்டு, ஏற்பாட்டுப் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். 
  
அமைப்பின் நிர்வாகக் குழு பின்வருமாறு:- 
  
தலைவர்:  
‘ஹிதாயா’ அப்துர்ரஹ்மான்
  
துணைத்தலைவர்:  
எஸ்.அப்துல் வாஹித்
  
செயலாளர்:  
கே.எம்.டி.சுலைமான்
  
துணைச் செயலாளர்:  
எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
  
பொருளாளர்:  
எம்.எல்.ஹாரூன் ரஷீத்
  
செயற்குழு உறுப்பினர்கள்:  
(01) உமர் ஒலி 
(02) ஏ.எஸ்.முஹ்யித்தீன் 
(03) ஹிதாயா ஸதக்கத்துல்லாஹ் 
(04) மரைக்கார் 
(05) பல்லாக் அப்துல் காதிர் நெய்னா
  
(06) முத்து இஸ்மாஈல் 
(07) ஏ.எஸ்.புகாரீ 
(08) ஷஃபீயுல்லாஹ் 
(09) அப்துல் மாலிக் 
(10) எஸ்.கே.ஸாலிஹ்
  
(11) எம்.எம்.முஜாஹித் அலீ 
(12) எம்.என்.அஹ்மத் ஸாஹிப் 
(13) ஹஸன் இர்ஷாத் 
(14) ஏ.கே.இம்ரான்
  
இவ்வாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  |