காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் யுனைட்டெட் ஃபுட்பால் லீக் ஜூனியர் கால்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களிடையே புதைந்திருக்கும் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் நோக்குடனும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், யுனைட்டெட் சூப்பர் கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டி இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 09 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மேனிலை மாணவர்களுக்கான யுனைட்டெட் ஃபுட்பால் லீக் சீனியர் சுற்றுப்போட்டி செப்டம்பர் 09ஆம் தேதியன்று இறுதிப்போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 06 முதல் 08ஆம் வகுப்பு வரை பயிலும் - 14 வயதுக்குட்பட்ட - பள்ளி இளநிலை மாணவர்களுக்கான யுனைட்டெட் ஃபுட்பால் லீக் - யு.எஃப்.எல். ஜூனியர் கால்பந்து சுற்றுப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று துவங்கி, அக்டோபர் 01ஆம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது.
நேற்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணியும் மோதின. ஈரணிகளும் தலா 2 கோல்களை அடித்து சமனில் இருந்த நிலையில் ஆட்ட நேரம் நிறைவுற்றதால், டை-ப்ரேக்கர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. இதில், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூன்றாமிடத்திற்கான அணியைத் தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. காலரி பேர்ட்ஸ், ஹார்டி பாய்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இப்போட்டியில், ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் ஆட்டம் நிறைவுற்றதையடுத்து, டை-ப்ரேக்கர் - சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில், காலரி பேர்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்ற பெற்று, மூன்றாமிடத்தைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், இதர அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
தகவல்:
ஆசிரியர் S.B.B.புகாரீ
மற்றும்
ஹபீப் |