Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:11:02 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9265
#KOTW9265
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 1, 2012
காயல்பட்டினத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் யார், யார்?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3029 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று (01.10.2012) சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளி / கட்டிடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் பட்டியலில், 18 வயது நிரம்பிய வாக்காளர் எவரேனும் விடுபட்டிருப்பின் / தவறுகள் இருப்பின், உடனடியாக உரிய படிவத்தில் அவர் வசித்திடும் பகுதிக்குரிய வாக்குச் சாவடியில் நியமனம் செய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் மனு வழங்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திடும் பணிக்கு இன்று 01.10.2012 முதல் 31.10.2012 வரை மனுக்கள் - தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடிகளிலும் பெறப்படுகின்றன.

மேலும், வருகிற 07.10.2012, 14.10.2012, 21.10.2012 ஆகிய மூன்று விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை) நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மனுக்கள் பெற்றிட தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, படிவம் 6இல் புகைப்படம் ஒட்டியும், பெயர் நீக்கம் செய்திட படிவம் 7ஐயும், திருத்தம் செய்திட படிவம் 8ஐயும், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8ஏ-வையும் பூர்த்தி செய்து அளித்திட வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் சரிப்பார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இணைக்க அல்லது திருத்தப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும் பணியில் முக்கிய பங்கினை வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BOOTH LEVEL OFFICER) செய்கிறார். வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்பவர், உள்ளூர் வாக்காளர்களுக்கு நன்கு பழக்கமான மாநில அரசு/ஓரளவு அரசு சார்ந்த அலுவலர் ஆவார். இவர், பொதுவாக, அதே வாக்குப்புதிவு பகுதியில் உள்ள ஒரு வாக்காளர் ஆவார். இவர், உள்ளூர் அளவில் அவர் அறிந்தவற்றைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு உதவுகிறார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்பவர் அடிமட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரதிநிதியாக உள்ளார். இவர், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறார். இவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு பகுதிக்குத் தொடர்புடைய வாக்காளர் பட்டியலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான களத்தகவலைச் சேகரிக்கிறார். வாக்குச்சாவடி நிலை அலுவலர், ஒரு முழுநேர தேர்தல் அலுவலர் அல்லர் என்ற போதிலும் அவர் ஒரு பொறுப்பு வாய்ந்த குடியியல் பணியை ஆற்றுவதால் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பொறுப்பு, அவருடைய பணிக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் (ஆண்/பெண்), அவருடைய அதிகாரவரம்பின் கீழ் ஒரு / இரண்டு வாக்குச்சாவடிகளைக் கொண்டிருப்பர்.

காயல்பட்டினத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் யார், யார் என்ற விபரம் - வாக்குச்சாவடி வாரியாக (வார்ட் விபரத்துடன்) கீழே தரப்பட்டுள்ளது.

1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம் (வடக்குபாகம்), தைக்காதெரு, காயல்பட்டினம்
(1) குலாம்சாகிப் தம்பித் தோட்டம், வார்டு 18
(2) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு, வார்டு 18

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: சி.தமிழரசி, காமராஜபுரம், ஆறுமுகநேரி (9942093402)

2. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்), தைக்காதெரு, காயல்பட்டினம்
(1) குருசடி, வார்டு 18
(2) கோமான் புதூர், வார்டு 18
(3) சேதுராஜா தெரு, வார்டு 18

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: சி.தமிழரசி, காமராஜபுரம், ஆறுமுகநேரி (9942093402)

3. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டினம்
(1) சீதக்காதி நகர், வார்டு 15
(2) சிவன் கோயில் தெரு, வார்டு 15

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆனந்தி, ஆறுமுகநேரி

4. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வடக்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டினம்
(1) மங்கள விநாயகர் கோயில் தெரு, வார்டு 15
(2) உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு, வார்டு 15

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆனந்தி, ஆறுமுகநேரி

5. அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்டு ரோடு 2, வார்டு 14
(2) ரத்தினாபுரி, வார்டு 14

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: எஸ்.விஜிலா, அண்ணாநகர், காயல்பட்டினம் (9994969849)

6. அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்ட்ரோடு 1, வார்டு 14
(2) அழகாபுரி, வார்டு 14
(3) அழகாபுரி தெற்குத் தெரு, வார்டு 14
(4) சந்தண மாரியம்மன் கோவில் தெரு, வார்டு 14
(5) நியூகாலனி, வார்டு 14
(6) பாஸி நகர், வார்டு 14

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: எஸ்.விஜிலா, அண்ணாநகர், காயல்பட்டினம் (9994969849)

7. சென்டரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், அறை-9அ, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
(1) அருணாசலபுரம், வார்டு 1
(2) கடையக்குடி, வார்டு 1

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: டி.பிரிக்ஸ் வைட், காந்தி தெரு, ஆறுமுகநேரி (9486481984)

8. சென்டரல் துவக்கப்பள்ளி வடக்குகட்டிடம், சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம், காயல்பட்டினம்
(1) கோமான் மேலத் தெரு, வார்டு 1
(2) கோமான் நடுத் தெரு, வார்டு 1
(3) கோமான் கீழத் தெரு, வார்டு 1

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: டி.பிரிக்ஸ் வைட், காந்தி தெரு, ஆறுமுகநேரி (9486481984)

9. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம், கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்
(1) கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை, வார்டு 7
(2) கீழ நெய்னாதெரு (மங்காரதெரு), வார்டு 7

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆர்.சுமதி, கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை), காயல்பட்டினம் (9842358753)

10. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டினம்
(1) பண்டகசாலை காரனார் தெரு தீவுத் தெரு, வார்டு 7
(2) (மங்காரத் தெரு) கீழநெய்னார் தெரு, வார்டு 3

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆர்.சுமதி, கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை), காயல்பட்டினம் (9842358753)

11. சென்ட்ரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு பகுதி, வகுப்பு-7சி, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
(1) நெய்னார் தெரு, வார்டு 3

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஏ.சுந்தரி, வன்னிமானகரம் (9787626355)

12. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு பாகம், வகுப்பு-8ஆ, காயல்பட்டினம்
(1) சித்தன் தெரு, வார்டு 6
(2) துஷ்டராயன் தெரு, வார்டு 6
(3) அம்பல மரைக்காயர் தெரு, வார்டு 6

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: எஸ்.ஜெயா பாலஷாந்தி, கோமான்புதூர், காயல்பட்டினம் (9994567364)

13. சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி, வகுப்பு-7C , சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
(1) குறுக்குத் தெரு, வார்டு 4
(2) ஆறாம் பள்ளி தெரு, வார்டு 5

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆர்.ஷென்பகவதனம், காயல்பட்டினம் (9487211645)

14. சென்டரல் துவக்கப்பள்ளி, (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்
(1) கி மு கச்சேரித் தெரு, வார்டு 5
(2) மகதூம் தெரு, வார்டு 5
(3) முகைதீன் தெரு, வார்டு 5

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆர்.ஷென்பகவதனம், காயல்பட்டினம் (9487211645)

15. சுபைதா துவக்கப்பள்ளி தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டினம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 2

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஏ.ரஸ்யா, அருணாச்சலபுரம், காயல்பட்டினம் (9688386479)

16. சுபைதா துவக்கப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டினம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 4

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஏ.ரஸ்யா, அருணாச்சலபுரம், காயல்பட்டினம் (9688386479)

17. சுபைதா பெண்கள்மேல்நிலைப்பள்ளி, கிழக்குபகுதி தெற்குபாகம், காயல்பட்டினம்
(1) காட்டு தைக்கா தெரு, வார்டு 17

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: சந்த்ரா, பெருமாள்புரம், ஆறுமுகநேரி (9042874286)

18. சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம், தரைதளம், காயல்பட்டினம்
(1) குத்துக்கல் தெரு, வார்டு 4
(2) குத்துக்கல் தெரு, வார்டு 17

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: சிந்தாமதார், காயல்பட்டினம் (9952369803)

19. எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்குகட்டிடம், கிழக்குபாகம் 9சி, காயல்பட்டினம்
(1) மருத்துவர் தெரு, வார்டு 16
(2) தைக்கா தெரு, வார்டு 16
(3) புதுக்கடை தெரு, வார்டு 16

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: எஸ்.கலாவதி, சிவன்கோவில் தெரு, காயல்பட்டினம் (9788732783)

20. எல்.கே. துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், தரைதளம், வடக்கு பாகம், காயல்பட்டினம்
(1) பெரிய நெசவு தெரு, வார்டு 11

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: பி.நேசம் விசெந்தி க்ரேடா, உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, காயல்பட்டினம் (9842996829)

21. எல்.கே. துவக்கப்பள்ளி, தெற்கு கட்டிடம், மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு, காயல்பட்டிணம்
(1) கருத்தம்பி மரைக்காயர் தெரு, வார்டு 11

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: பி.நேசம் விசெந்தி க்ரேடா, உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, காயல்பட்டினம் (9842996829)

22. எல்.கே. துவக்கப்பள்ளி மேறகு கட்டிடம தெற்கு பகுதி வகுப்பு 3ஏ, காயல்பட்டினம்
(1) சின்னநெசவு தெரு, வார்டு 10
(2) அலியார் தெரு, வார்டு 10
(3) பரிமார் தெரு, வார்டு 10

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: ஆர்.பிரேமா, ரத்தினாபுரி, ஆறுமுகநேரி (9042544726)

23. எல்.கேமேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம் மேற்குபகுதி காயல்பட்டிணம்
(1) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13
(2) கீழ லெட்சுமிபுரம், வார்டு 14
(3) லட்சுமி புரம், வார்டு 14

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: கலாராணி, காயல்பட்டினம்

24. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கடற்கரைத் தெரு, வார்டு 9

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: எஸ்.கௌரி, மங்களவாடி, காயல்பட்டினம் (9677554939)

25. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
(1) சொழுக்கார் தெரு, வார்டு 8
(2) கொச்சியார் தெரு, வார்டு 8
(3) பண்டகசாலை தெரு, வார்டு 8
(4) தேங்காய் பண்டக சாலை தெரு, வார்டு 8
(5) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: வீ.பாப்பா, தேங்காபண்டக சாலை, காயல்பட்டினம் (9941540136)

26. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்
(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9
(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10
(3) திருச்செந்தூர் ரோடு, வார்டு 10

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: டி. காசிலிங்கம், பூந்தோட்டம், காயல்பட்டினம்

27. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கே.டி.எம்.தெரு ,மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டிணம்
(1) மருதும் அலாவுதீன் தோட்டம், வார்டு 13
(2) வண்ணாக் குடித்தெரு, வார்டு 13
(3) விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13
(4) வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: தெய்வகனி, வீரபாண்டியபட்டினம் (9489291268)

28. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம், கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) மங்களவாடி, வார்டு 12
(2) மேல நெசவுத் தெரு, வார்டு 12
(3) மொட்டையன் தோட்டம், வார்டு 12
(4) ஓடக்கரை வடக்கு தெரு, வார்டு 12
(5) வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 12
(6) வாணியக்குடி தெரு, வார்டு 12

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: பி.முத்துலெட்சுமி, ஓடக்கரை (9442885878)

29. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டினம்
(1) கண்டிபிச்சை தோட்டம் (மன்னராஜா கோவில் தெரு), வார்டு 12
(2) பூந்தோட்டம், வார்டு 12
(3) புதுதெற்குவாடிதெரு (தைக்காபுரம்), வார்டு 12
(4) ஓடக்கரை, வார்டு 12

வாக்குச்சாவடி நிலை அலுவலர்: பி.முத்துலெட்சுமி, ஓடக்கரை (9442885878)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி... நன்றி...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [01 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22559

நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... தொடரட்டும் உங்கள் சேவைகள்... அதனால் பயன்பெறட்டும் நமது நகர் மக்கள் ...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மேலும் பல அரசு சம்பந்தமான தகவலை தங்களின் இணையதளம் மூலம் எதிர்பார்க்கிறேன்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [01 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22560

காயல்பட்டினத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் யார், யார் என்ற விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி.

மேலும் பல அரசு சம்பந்தமான தகவலை தங்களின் இணையதளம் மூலம் எதிர்பார்க்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [01 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22562

காயல்பட்டினத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் யார் என்ற முழு விபரம் தந்தமைக்கு நன்றி. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,திருத்த ஆட்சியாளர் ஆணையிட்டால் அடுத்து எதிர்வரும் 6 மதத்திற்குள் திருச்செந்தூர் தொகுதிக்கு தேர்தல் வரப்போகுது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22568

பிரயோசனமான தகவலுக்கு நன்றிகள்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த முகாமை எப்படி பயன்படுத்துவது. ஆள் நேரில் வரனும் என்பது கட்டாயமா.

அப்புறம், அலுவலர்கள் லிஸ்ட்டை பார்த்தால் சிறு சந்தோசம், காரணம் அதிக அலுவலர்கள் பெண்களாகவே இருக்கின்றார்கள். ஆக, பெண்கள் முன்னேற்றம் சற்று அதிகரித்து இருப்பது உண்மை போல தெரிகின்றது.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved