இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எத்தனை யாத்திரிகர்களை ஹஜ் பயணத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற அளவினை சவுதி அரசாங்கம் நிர்ணயிக்கிறது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 0.1 சதவீதம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்று கூறுப்படும் இந்த அளவின்படி, இந்தியாவிற்கு இவ்வாண்டு 170,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 25 சதவீதம் (45,000) இடங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதானமான இடங்கள் (125,000) இந்திய ஹஜ் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் - தனியார் நிறுவனங்களுக்கான இடங்களை ஒதுக்கும் விதம், ஒவ்வொரு ஆண்டும் வேறுபட்டு வந்துள்ளது. இவ்வாண்டு கடைபிடிக்கப்பட்ட முறைப்படி - ஹஜ் சேவை நிறுவனங்களை, இந்திய அரசாங்கம் இரண்டு வகையாக பிரித்தது.
முதல் பிரிவில் - இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் - ஐந்து அல்லது அதற்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னர் - தன்னை பதிவு செய்துக்கொண்ட நிறுவனங்கள் உள்ளன.
இரண்டாம் பிரிவில் - இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் - ஒன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பதிவு செய்துக்கொண்ட நிறுவனங்கள் உள்ளன.
முதல் பிரிவில் இவ்வாண்டு - இந்தியா முழுவதும் - சுமார் 195 நிறுவனங்கள் உள்ளன. இரண்டாம் பிரிவில் இவ்வாண்டு - இந்தியா முழுவதும் - சுமார் 143 நிறுவனங்கள் உள்ளன.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இடம் சரிசமமாக பகிர்ந்து கொடுக்கப்படுவதில்லை. பகிர்ந்து கொடுக்கப்படும் வழிமுறையினையும் - இந்திய அரசு வகுத்துள்ளது.
அதன்படி பிரிவு ஒன்று (CATEGORY 1) நிறுவனங்கள் கீழ்க்காணும் வழிமுறைப்படி இடங்கள் பெறுகின்றன:
மொத்த தனியார் இடங்களில் (45,000) 60 சதவீதம் - பிரிவு ஒன்று நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முதல் கட்டமாக - அந்த பிரிவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், தலா 50 இடங்கள் வழங்கப்படும். அதன் பிறகு மீதி இடம் இருந்தால், IATA நிறுவனத்தின் உறுப்பினராக குறைந்தது ஐந்தாண்டுகள் இருந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக 15 இடங்கள் வழங்கப்படும். இதன்பிறகும் மீதி இடங்கள் இருந்தால் - கடந்த ஐந்தாண்டில், அந்த நிறுவனங்கள் ஹஜ் பயணத்திற்கு அனுப்பியுள்ள யாத்திரிகர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, இடங்கள் ஒதுக்கப்படும்.
பிரிவு இரண்டு (CATEGORY 2) நிறுவனங்கள் கீழ்க்காணும் வழிமுறைப்படி இடங்கள் பெறுகின்றன:
மொத்த தனியார் இடங்களில் (45,000) 40 சதவீதம் - பிரிவு இரண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முதல் கட்டமாக - அந்த பிரிவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், தலா 50 இடங்கள் வழங்கப்படும். அதன் பிறகு மீதி இடம் இருந்தால், IATA நிறுவனத்தின் உறுப்பினராக குறைந்தது ஐந்தாண்டுகள் இருந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக 15 இடங்கள் வழங்கப்படும். அதன்பிறகு மீதி இடங்கள் இருந்தால் - பிரிவு ஒன்றுக்கு, அந்த இடங்கள் மாற்றப்படும்.
இந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் இடங்கள் பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் குறித்த விபரங்களை காண இங்கு அழுத்தவும்.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு பெற்றுள்ள நிறுவனங்கள் குறித்த தகவல் இதோ:
பிரிவு ஒன்று (CATEGORY 1)
(1) M/s. Millath Haj Service,
No. 1A, Habibullah Road, T. Nagar, Chennai - 600 017.
Tamilnadu
ஒதுக்கப்பட்ட இடம்: 167
(2) M/s. Dheen Haj Service,
22, Aravamudhan Garden Street, Egmore,
Chennai – 600 008, Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 359
(3) M/s. Al-Noor Haj Service (India) Pvt. Ltd.,
Aysha Complex, 38/1, Court Road, Thanjavur - 613 001, Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 245
(4) M/s. Al Amanath Haj Service India Pvt. Ltd.,
Old No.191, New No.251, 2nd Floor “Hamid Building”,
Anna Salai, Chennai – 600 006, Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 359
(5) Al-Haramine Haj Service Private Limited.
Old no 73, New-10 ThathaMuthiappan Street,
Opp. Kathawalchavadi Police Station,
George Town, Broadway,
Chennai-600001
Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 167
(6) M/s. Al – Fathah Haj Services (P) Ltd.,
82-C, Customs Road, Kayalpatnam 628 204, Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 167
(7) M/s. Richway Tours & Travels,
Qurrathul Ayne,
33 Sir Shanmugam Road, R.S.Puram, Coimbatore – 641002
Tamilnadu
ஒதுக்கப்பட்ட இடம்: 109
(8) M/s. Al-Safa Haj Service, S.T.M. Complex, South 2nd Street,
Pudukkottai – 622001, Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 140
(9) M/s. Al-Hudha Haj Service (P) Ltd.
2/117 Armenian Street, IInd Floor, Mannady, Chennai – 600 001, Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 109
(10) M/s. Bushra Haj Service,
229/1, Linghi Chetty Street, 1st floor,
Behind Masjid-e-Mamoor,
P.O. Box No.220,
Mannady, Chennai –600 001,
Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 112
(11) M/s. MOULANA HAJ SERVICES,
No. 65 Ponnappa St. Purasawakkam,
Chennai - 84.
Tamilnadu
ஒதுக்கப்பட்ட இடம்: 128
பிரிவு இரண்டு (CATEGORY 2)
(12) H.M Travels,
96B Hydross Manzil, First Floor,
Anna Nagar, Bye Pass Road,
South Ukhadam, Coimbatore - 641 001.
Tamil Nadu.
ஒதுக்கப்பட்ட இடம்: 50
(13) M/S FLY WAYS TRAVELS,
NO. 07 P.N.R LAYOUT,
TRICHY ROAD,
COIMBATORE-641018 TAMILNADU
ஒதுக்கப்பட்ட இடம்: 50
(14) M/s Al Adam Haj Service (P) Ltd,
No. 791, 1 & 2nd Floor, Eswaran kovil Street,
Lena Corner, Fort – Coimbatore - 641001,
Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 50
(15) MARWA HAJ SERVICE,
K.T.M.S. Trust building,
No.36/2, Model School Road,
Thousand lights,
Chennai- 600006,
Tamilnadu
ஒதுக்கப்பட்ட இடம்: 50
(16) BINARANGG TRAVELS PRIVATE LIMITED,
Old No 41, New No.64,
2nd floor Hawwa Complex,
Mannady street,
(Next Mannady post of office),
Chennai - 600001, Tamilnadu
ஒதுக்கப்பட்ட இடம்: 60
(17) Al- Manasik Haj Tours & Travels,
57 & 128 Valarmathy Nagar,
Thudiyalur, Coimbatore-641 034
Tamil Nadu
ஒதுக்கப்பட்ட இடம்: 50
M/s.Ahmed World Travels Tours & Cargo P. Ltd. (No. 5/1, Habibullah Road, T.Nagar, Chennai-600 017) என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 இடங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி - Millath Haj Service என்ற பெயரில் - பிரிவு ஒன்றில் - அங்கீகாரம் பெற்றுள்ளதால், இந்த நிறுவனத்திற்கு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. |