இவ்வாண்டு புனித ஹஜ் பயணத்தை - தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் நிறைவேற்றவிருக்கும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹஜ் பயணியருக்காக, சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் “மக்கா - காயல் ஹஜ் சேவை மற்றும் வழிகாட்டு அமைப்பு” சார்பில் ஹஜ் பயண வழிகாட்டு கையேடு அச்சிட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது.
*** தேவைகளுக்காக தொடர்புகொள்ள வேண்டிய மக்கா காயலர் பொறுப்பாளர்களின் தொலைபேசி எண்கள்...
*** ஹஜ் பயணியருக்காக ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் விதிமுறைகள்...
உள்ளிட்ட தகவல்கள் இக்கையேட்டில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை இக்கையேடு கிடைக்காத - தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹஜ் பயணியர், +91 98658 19541 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கையேட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இது வல்லோனின் அருளால் வழங்கப்பாட்ட சாதனை...வாழ்த்துகின்றேன். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[02 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22565
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இக் கையேடு வழங்கும் தீர்மானம் மக்கவிலும் சரி! ஜித்தா பொதுக்குழுவிலும் சரி! நிறைவேற்றப்பட்ட பின் வேலை பளு காரணமாக இக் கையேட்டின் வாசகங்களை தொகுக்க இயலாமல் காலதாமதம் ஆகிவந்தது.
எம் மன்றத்தின் பொறுப்பிலுள்ளவர்கள் பலரது வற்புறுத்தலால் ஓரிரவு கண் விழித்திருந்து சில மணி நேரங்கள் செலவிட்டதன் பலனாக இக் கையேடு உருவாயிற்று. மறு நாளே மக்கா மற்றும் ஜித்தா செயற்குழு உறுப்பினர்கள் ஆளாளுக்கு அவசர அவசரமாக ஈமெயில் அனுப்பி அலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதே நாள் மக்கா மூவன்ஃபிக் ஹோட்டலில், பொறியாளர்- பஷீர் அஹ்மது காக்கா, நண்பர் சீனா-மொகுதூம், ஹில்ட்டன்-இபுறாஹீம் மற்றும் சிலர் அவசர சந்திப்பு நிகழ்த்தி வாசகங்களை சரி பார்த்து உடனெயே அப்ரூவல் நல்கி காயல்பட்டணம்.டாட் காம் உள்பட நமதூர் இணையதளங்களுக்கு அனுப்பியும் வைத்தார்கள். இதைக் கையேடு வடிவில் அச்சிலேற்றி ஹாஜிமார்களுக்கு வினியோகிக்கும் பொறுப்பை நமதூர் சமூக ஆர்வலர் ஒருவரிடம் ஒப்படைக்கவும் செய்தார்கள். இவையனைத்தும் ஓரிரு வாரங்களுக்கு முன் நடந்தவையே!
இவ்வளவு சீக்கிரத்தில் இது தக்க சமயத்தில் ஹாஜிகளின் கரங்களை சென்றடையச் செய்த உள்ளூர்வாசிக்கும் உறுதுணையாக நின்ற ஜித்தா காயல் நல மன்றத்தினருக்கும் அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை இம்மையிலும் நாளை மறுமையிலும் வழங்கியருள்வானாக! ஆமீன். -ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross