இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்தமஸ் கபீர் இன்று காலை பதவி ஏற்றார்.
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் - ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் 39வது தலைமை நீதிபதியான இவர், இப்பொறுப்பினை ஏற்கும் நான்காவது முஸ்லிம் ஆவார்.
நிகழ்ச்சியில் - துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அல்தமஸ் கபீர் மறைந்த இந்திய மந்திரி ஹுமாயுன் கபீரின் மருமகன் ஆவார். ஜூலை 19, 1948 அன்று கொல்கத்தாவில் பிறந்த இவர், 1973 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது சேவையை துவங்கினார். கொல்கத்தாவின் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றிய பிறகு, 1990 ஆம் ஆண்டு கொல்கத்தா நீதி மன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வுபெற்று, அதே ஆண்டில் - உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பாட்டார்.
உச்சி நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பதால், வரும் ஆண்டு (2013) ஜூலை 19 அன்று அல்தமஸ் கபீர் தன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவார். |