காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்ற சிறப்புக் கூட்டம் 12.09.2012 புதன்கிழமையன்று மதியம் 03.00 மணிக்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இக்கூட்டத்தில், தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ச.சத்தியபாமா வரவேற்புரையாற்றினார். மாணவியர் மன்ற செயலாளரும் - கல்லூரியின் ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவியுமான சிவரஞ்சனி மன்ற அறிக்கையை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, “நாடகக் கலையில் மனோன்மனீயம் சுந்தரம் பிள்ளையின் பங்கு” என்ற தலைப்பில், கல்லூரியின் தமிழ்த்துரை விரிவுரையாளர் சு.ஏஞ்சல் லதா உரையாற்றினார். பின்னர், கணிதவியல் முதலாமாண்டு மாணவியும் - மாணவியர் மன்ற துணைச் செயலாளருமான சிந்தா அஃப்ரோஸ் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்ட ஏற்பாடுகளை உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத் துணைத்தலைவரும், விரிவுரையாளருமான முனைவர் ம.லெ.இராஜேஷ்வரி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். |