செப்டம்பர் 18 அன்று நடந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திட்டக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 24 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் நடைபெற்றது. அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முத்து அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆஷிஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட முதல திட்டக் குழு கூட்டம் திட்டக்குழுத் தலைவர் திரு.என்.சின்னத்துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக முதல்வர் அனுமதி பெற்று தூத்துக்குடி, கோரம்பள்ளம் நீர்த்தேக்கம் ரூ 20.57 கோடியில் செயல்படுத்தவும், திருவைகுண்டம் அணை தூர்வார ரூ 4.54 கோடி மற்றும் ரூ 1.22 கோடியில் திட்டம் தயாரிககப்பட்டுள்ளது. கூட்டத்தில மாவட்ட ஊரகவளர்ச்சி திட்ட அலுவலா திருமதி ஜெ. பெல்லா, மாவட்ட திட்ட மதிப்பீடு அலுவலர் திருமதி கஸ்தூரி, மாவட்ட திட்டக்குழுத் உறுப்பினர்கள் திரு ராஜகோபால்,
திரு கதிரவன் ஆதித்தன், திரு திருபாற்கடல், திருமதி கவுரி, திரு மதியழகன், திரு. மனோஜ், திருமதி ரேவதி, திருமதி கலைவாணி, திரு பால்ராஜ், திரு பொன்ராஜ், திரு மாரிமுத்து, திரு வடிவேல் மற்றும் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம்:
www.tutyonline.net |