தமிழகத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களில் வசூல் செய்யப்படும் பதிவு கட்டணங்களில் (STAMP DUTY) ஒரு பங்கு - உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு - ஜனவரி 2012 - மார்ச் 2012 வரையிலான மூன்று மாத காலகட்டத்திற்கு - 4,69,042 ரூபாய், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் - தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த தொகை - காயல்பட்டினம் நகராட்சியின் State Bank of India வங்கி தூத்துக்குடி கிளை கணக்கிற்கு (எண் 10852663985) அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே IAS - செப்டம்பர் 6 அன்று வெளியிட்டார்.
பத்திர மதிப்பில் 2% (Transfer Duty) - கூடுதல் தொகையாக (Surcharge) தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படுகிறது. அதில் 50௦% தொகை உள்ளாட்சி மன்றங்களுக்கும், 50% தொகை - TAMILNADU URBAN ROAD INFRASTRUCTURE FUND (TURIF) - வகைக்கும் ஒதுக்கப்படுகிறது.
1. கூட்ஸ் ட்ரெயினுக்கு... டாட்டா posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[27 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22454
நகராட்சிக்கு இந்த வகையில் வருமானம் வந்துள்ளது, அந்த வகையில் வருமானம் வந்துள்ளது, அரசாங்கம் இவ்வளவு பணம் அனுப்பியுள்ளது, இவ்வளவு பணம் பாங்கில் உள்ளது..!!
இதை எல்லாம் கேட்க மகிழ்ச்சியாக தான் உள்ளது. ஆனால், மக்களுக்கு பயன்படாமல், எந்த நலத்திட்டமும் நடைபெறாமல் நகராட்சி முடங்கி இருக்கின்றதே..??..!!!
இந்த மாதிரி செய்திகளை படித்தால், பயணிகளே இல்லாத கூட்ஸ் ட்ரெயினுக்கு, டாட்டா காட்டினமாதிரி உள்ளது.
2. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[27 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22468
என்னதான் இந்த நகராசிக்கு வருமானம் எங்கு இருந்து வந்தாலும் ஒன்றும் நடக்கபோவது இல்லை.
வந்த வருவாயில் என்ன செய்யல்லாம் என்று அணைத்து உறுப்பினர்களிடம் ஆலோசனை போட கூட இந்தமாத மாதந்திர கூட்டம் கிடையாதாம். உருப்படும் நகராச்சி.
ஆபிதா அம்மையாரின் நகராச்சி நிருவாகமும் சரி, மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசும் சரி இரண்டும் ஒன்றுதான்.
5 ஆண்டுக்கு ஒன்றும் நடக்காது, நகர்ச்சியை கலைக்கவும் முடியாது. உறுபினர்களும் கால சுழல்க்கு ஏற்ப மாறி மாறி ஆதரிப்பார்கள். இறுதியில் பக்கத்துக்கு பஞ்சாயத்துக்கு வந்த வருவாய்கள் எல்லாம் திரும்ப கொடுப்பார்கள், இதுதான் நடக்கபோகுது பாருங்கள்.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[27 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22470
அஸ்ஸலாமு அலைக்கும்
இவ்வளவு அதிகம் வருவாய் வரக்கூடிய நம் ஊர் நகர் மன்றம் இருந்தும்.....என்னையா....பிரோஜனம் ????நம் நகர் மன்றம் நடத்த முடியாமல் போய் ...நம் நகர் மன்ற கையிருப்பு பணமும் + நமக்கு வரகூடிய தமிழக அரசின் நல்ல திட்டக்களும் அப்படியே ....நேராக பக்கத்துக்கு ஊர் நகர் மன்றகளுக்கு கண்டிப்பாக போய் விடும் ....இது தான் கூடிய விரைவில் நடக்கும் .....
அதன் பின்பு நாம் ஒற்றுமையாகி எந்த ஒரு பிரோஜனமும் இல்லை.....சரோ ....................
நம் ஊர் பொது மக்களின் வரி பணமும் வினாகி போய் விடுமோ.....என்கிற ....மன கவலை தான் .......
இப்படி நம் நகர் மன்றத்தை முடக்குவதில் ..... என்ன லாபமோ ......சந்தோசமோ ....... அல்லாஹ் அறிவான் .......
நம் நகர் மன்ற ...தலைவி அவர்களும் & நம் நகர் மன்ற உறுப்பினர் அவர்களும் எப்போது ஒற்றுமை ஆவார்கள் என்று காத்து இருக்கும் .....காயல் மாநகர பொது மக்களில் ஒருவனாக காத்து இருப்பவன் .......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross