ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஹாங்காங் நகை - மாணிக்க கண்காட்சி (SEPTEMBER HONGKONG JEWELLERY AND GEM FAIR) - இவ்வாண்டு 19.09.2012 முதல் 23.09.2012 வரை நடைபெற்றது. இக்கண்காட்சியில் உலகின் பல்வேறு நகை - மாணிக்க வணிகர்கள் தமது விற்பனையகத்தை அமைத்திருந்தனர்.
இக்கண்காட்சியில், காயலர்களின் பாங்காக் ஜெம் ஹவுஸ், கே.டி.ஜெம் ஹவுஸ், ஹாங்காங் ஜெம் ஹவுஸ் ஆகிய வணிக நிறுவனங்கள் சார்பிலும் விற்பனையகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பாங்காக் ஜெம் ஹவுஸ் சார்பில் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் , ஹாஜி வாவு உவைஸ் ஆகியோர் விற்பனையகத்தை நடத்தினர். கே.டி.ஜெம் ஹவுஸ் சார்பில் ஹாஜி நூஹு, எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ ஷாதுலீ, ஹாஃபிழ் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஆகியோர் விற்பனையகத்தை நடத்தினர். ஹாங்காங் ஜெம் ஹவுஸ் சார்பில் வாவு இப்ராஹீம் விற்பனையகத்தை நடத்தினார்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
எம்.என்.எஸ். ஹமீத் |