தமிழகத்தில் மின் பற்றாக்குறையைக் காரணங்காட்டி, மின்தடை செய்யப்படும் நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் வினியோகம் செய்யப்படும் நேரத்தை விட மின்தடை செய்யப்படும் நேரம் அதிகம் என்று சொல்லுமளவுக்கு மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
20.09.2012 வியாழக்கிழ0மை (நேற்று) முதல் 21.09.2012 வெள்ளிக்கிழமை (இன்று) நண்பகல் 12.00 மணி வரை “மின் வினியோகம் செய்யப்பட்ட” நேரம் பின்வருமாறு:-
20.09.2012 அன்று (நேற்று)
நள்ளிரவு 04.00 மணி முதல் 05.00 மணி வரை. (ஒரு மணி நேரம்)
அதிகாலை 06.30 மணி முதல் 08.00 மணி வரை. (ஒன்றரை மணி நேரம்)
நண்பகல் 12.15 முதல் மதியம் 02.15 மணி வரை. (இரண்டு மணி நேரம்)
மாலை 05.15 மணி முதல் இரவு 08.30 மணி வரை. (4.15 மணி நேரம்)
இரவு 09.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை. (2 மணி நேரம்)
21.09.2012 அன்று (இன்று)
நள்ளிரவு 12.45 மணி முதல் 03.00 மணி வரை. (2.15 மணி நேரம்)
நள்ளிரவு 04.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை. (ஒரு மணி நேரம்)
காலை 07.30 மணி முதல் காலை 08.00 மணி வரை. (அரை மணி நேரம்)
ஆக, 20.09.2012 அன்று (நேற்று) மொத்தம் 10.45 மணி நேரம் மட்டும் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில், நேற்று மட்டும் மொத்தம் 13.15 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டுள்ளது.
21.09.2012 (இன்று) நண்பகல் 12.00 மணி வரை உள்ள கணக்குப்படி, 3.45 மணி நேரம் மட்டும் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில், இன்று நண்பகல் 12.00 மணி வரை 8.15 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டுள்ளது.
(குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் சிற்சில நிமிடங்கள் வேறுபாடு இருக்கலாம்.) |