தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழகத்தை சார்ந்த ஹஜ் பயணிகளுக்கான விமான ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாநில நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் - இன்று (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் தங்க கலியபெருமாள் IAS, இந்திய ஹஜ் குழுவின் துணைத் தலைவர் அபூபக்கர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா. அலாவுதீன் IAS ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தமிழக பயணியர்களுக்கான முதல் விமானம் அக்டோபர் 2 அன்று சென்னையில் இருந்து புறப்படும்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |