இம்மாதம் 14ஆம் தேதியன்று நடைபெற்ற குவைத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மத்ரஸா கல்விக்கான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினராகத் நியமிக்கப்பட்டுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்ட - குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி ஆகியோருக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 25,000 தொகையும் இக்கூட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது குவைத் காயல் நல மன்ற பொதுக்குழு கூட்டம் மற்றும் உறப்பினர் ஒன்று கூடல் 14.09.2012 அன்று பாஹீல் கடற்கரையில் வைத்து மாலை 5.00 மணியளவில் ஜனாப் K.S அபு சாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
ஆரம்பமாக மாணவர் H.M. சேக் மதார் கிராஅத் ஓதினார் அதனை தொடர்ந்து எமது சங்கத்தின் செயலாளர் L.T. அஹ்மத் முஹியதீன் அவர்கள் கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று பேசினார். மேலும் இக்கூட்டத்தில் புதிய உறப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜக்வா தலைவர் மறைவுக்கு இரங்கல்:
ஜெய்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஜி பிரபு முஸ்தபா கமால் அவர்கள் வபாத்திருக்கு இரங்கல் தெரிவித்து அவர்களின் மக்பிரத்துக்காக துஆ செய்யப்பட்டது.
“வாழ்நாள் சாதனையாளர்” டாக்டர் தம்பிக்கு வாழ்த்து:
நம் தமிழ்நாடு அரசால் Dr M.G.R மருத்துவம் பல்கலைகழகம் வாழ்நாள் சாதனையாளர் என LIFE TIME ACHIEVEMENT விருதினை பெற்ற டாக்டர் முஹம்மது தம்பி அவர்களுக்கு எமது மன்றம் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.
முஸ்லிம் லீக் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து:
இந்தியா அரசால் மதரசா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட K.A.M. முஹம்மது அபூபக்கற்கு எமது மன்றம் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.
புதிய நிர்வாகக் குழு தேர்வு:
எமது சங்கத்தின் தலைவர் ஹாஜி S.M. ஹசன் மௌலான அவர்கள் தலைமையுரை ஆற்றும் போது அது சமயம் கடந்த 4 ஆண்டு காலம் அவர்களின் பதவி காலத்தில் இருந்த நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு இசைந்த போது, அது சமயம் நம் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவர்களும் அவர்களே மீண்டும் தலைவர் பணியில் இருந்து நீடிக்க வேண்டும் என்றும் மனமார்ந்த உள்ளத்தோடு "அல்லாஹ் அக்பர்" என்று முழங்க அனைவரும் சம்மதத்தோடு மீண்டும் தலைவர் பதவியில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்பு அதேபோல் மீண்டும் செயலாளராக L.T. அஹ்மது முஹியதீன் அவர்களும், புதிய துணை செயலாளராக KARAFI முஹம்மது அலி அவர்களும், மீண்டும் பொருளாளராக S.M.M. அபூ தாஹிர் அவர்களும் உறுப்பினர்களின் தக்பீர் முழக்கத்தோடு ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டார்கள்.
நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு:
சமீபத்தில் பல்வேறு நலத்திட்டத்துக்கு உதவி கேட்டு வந்திருந்த விண்ணப்பங்களுக்கு மொத்தமாக RS.25000.00 (மருத்துவம் 20000.00, கல்வி வகை 5000.00) உதவி வழங்கியது பொது குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
இக்ராஃ நிர்வாகச் செலவினத்திற்கு நிதியொதுக்கீடு:
இக்ராவின் வருடாந்திர நிர்வாக செலவுக்காக RS . 10000 /- வழங்கியதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து கவலை:
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மிகுந்த கவலை அளிப்பதாக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து, ஒற்றுமையாக பணிபுரிந்து, நகர்நலனை மட்டுமே நோக்கமாகக் கருதி செயல்படுமாறு குவைத் காயல் நல மன்றம் மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறது. அதற்கு வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என்றும் துஆ செய்யப்பட்டது.
வரவு - செலவு கணக்கறிக்கை தாக்கல்:
அடுத்ததாக எமது மன்றத்தின் பொருளாளர் S.M.M. அபூ தாஹிர் அவர்கள் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்கள்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
மற்றும் ஊர் நடப்புகள் பொதுவான விஷயங்கள் மற்றும் பல நல்ல கருத்துக்கள், ஆலோசனைகளை உறுப்பினர்கள் தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்.
மகளிர் சங்கமம்:
பொதுக்குழு ஒருபுறம் நடக்க, குடும்ப நிகழ்ச்சியாக மற்றொருப்பக்கம் பெண்கள் தங்களுக்கிடையில் கலந்துரையாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக உறுப்பினர்களுக்கு சிற்றுண்டி வழங்கி சகோதரர் ஹாமித் அவர்களின் துஆவுடன் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, குவைத் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
KARAFI முஹம்மது அலி
துணை செயலாளர்.
படங்கள்:
V.N.S. அப்துல் ரஹ்மான் (சில்லி) |