Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:27:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9179
#KOTW9179
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 19, 2012
வெள்ளி விழா சிறப்பு மலருக்கு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனுப்புவதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு! ஆங்கிலத்திலும் அனுப்பலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3387 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவினை - தூத்துக்குடி மாவட்டம் கொண்டாடி வருகிறது. விழாக்கள் நிறைவு பெற சில தினங்கள் உள்ள நிலையில் - வெளியிடப்படவுள்ள வெள்ளிவிழா சிறப்பு மலருக்கு படைப்புகள் அனுப்ப இறுதி நாள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் IAS வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் 19.10.2011 அன்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டினை வெள்ளி விழா ஆண்டாக கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட நலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு வெள்ளிவிழா துவக்க நாள் விழா 25.3.2012 அன்று தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையில் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. இவ்வாண்டு அக்டோபர் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அது வரையில் வெள்ளி விழா கொண்டாடட்டங்களை சிறந்த முறையில் நடத்திட மாவட்ட ஆட்சிதலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளி விழா மலர் முழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் குழு வெள்ளிவிழா சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட உள்ளது.

இம்மலரில் தூத்துக்குடி மாவட்டத்தின் பூகோள அமைப்பு, சமுதாய அமைப்பு, கடற்கரை தொடர்பான வரலாற்று சிறப்புகள் அடங்கிய தகவல்கள், நீராதார தகவல்கள், முத்துநகர் பற்றிய சரித்திர ஆவண ஆதாரங்கள், முத்து மற்றும் சங்கு குளித்தல் பற்றிய தகவல்கள், தூத்துக்குடி மாவட்ட மக்களின் பண்பாட்டு நாகரீக தகவல்கள், தொல்பொருள் ஆய்வு பற்றிய குறிப்புகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் பற்றிய தகவல்கள், நமது மாவட்டத்தில் வெளி நாட்டவர்கள் வாழ்ந்தது பற்றிய முக்கிய விபரங்கள், உலகளவில் பிரசித்தி பெற்ற மாவட்ட வல்லுனர்கள் பற்றிய தகவல்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று குறிப்புகள், நினைவகங்கள் தொடர்பான விபரங்கள், பாரம்பரிய கலைகள், இசைவாணர்கள் பற்றிய தகவல்கள், பாரம்பரிய நாட்டிய கலைகள் பற்றிய தகவல் தொகுப்புகள், தூத்துக்குடி மாவட்ட சிறப்பு வாய்ந்து முக்கிய கோவில்கள், தர்காக்கள், கிருஸ்துவ தேவாலையங்கள், ஜெயின் கோவில்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் பற்றிய தகவல்கள், அறிய மண் வகைகள் பற்றிய தகவல்கள், மீன்பிடி வள்ளங்கள், மானினங்கள், தாவரவினங்கள், உயிர்வாழினங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை வளங்களான பவளப்பாறைகள், ஆறுகள், அணைக்கட்டுகள், 1986 - ஆம் ஆண்டு ஆண்டுக்கு முன்பின் தூத்துக்குடி துறைமுகம் பற்றிய தகவல்கள், உப்பு தீப்பெட்டி, பட்டாசுகள் தயாரிப்பு ஆலைகள் பற்றிய தகவல்கள், 2020 - இல் தூத்துக்குடி எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள், தூமையான முத்து நகராக மாற்றுவதற்கான பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு, மரம் செடி கொடிகள் வளர்ப்பது, நீர் ஆதாரத்தை பாதுகாப்பது, திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக உள்ள தகவல்கள் குறித்த கட்டுரைகள் 30.9.2012 க்குள் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

இக்கட்டுரைகளை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Tamil & English) நேரிலோ அல்லது தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. மேலும் இக்கட்டுரைகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் collrtut @nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். சிறந்த 3 படைப்புகளுக்கு, சிறப்பு பரிசு மற்றும் சன்மானம் அளிக்கப்படும். மேலும் - இம்மலரை வெளியிடுவதற்கு பொதுமக்கள் தங்கள் நன்கொடையினையும் அளிக்கலாம். இம்மலரில் தங்களுடைய நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கான விளம்பரத்தை வெளியிட விரும்புவோர் விபரங்களை அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [20 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22296

வெள்ளி விழா மலர் சிறக்க வாத்துக்கள் ! நம்மை அதிகமாக சிந்திக்கவைக்கும் இதழ்களே நமக்கு உதவி புரிபவை . பழைய சட்டையை அணிந்தாவது புதிய இதழை வாங்கிப்படி . என்பது அறிஞர் அண்ணாவின் அமுத மொழி....யனவே வெள்ளிவிழா மலர் சிறக்க நம்மால் இயன்ற நன்கொடைகளை கொடுத்து உதவ முன் வர வேண்டும் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved