மலபார் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று நடைபெறுமென அதன் செயற்குழு அறிவித்துள்ளது. செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 42ஆவது செயற்குழுக் கூட்டம் 09.09.2012 அன்று காலை 11.00 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியேடு வாசித்தல்:
செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கடந்த கூட்டத்தின் நிகழ்ச்சியேட்டை வாசிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
மருத்துவ உதவி:
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் அவர்கள், மருத்துவ உதவி கோரி நமதூர் காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் கூட்டத்திலுள்ள உறுப்பினர்களுக்கு விரிவாக வாசித்துக் காட்டினார். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் முறைப்படி விசாரித்து உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் உரையாற்றினார். அவர் தனதுரையில், 05.08.2012 அன்று நம் மன்றத்தால் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து முடிந்தது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியை இணையதளம் மூலம் பார்த்த நம் சொந்தங்கள் கேரளாவில் மலபார் பகுதியில் காயளர்கள் இத்தனை பேர் இருக்கின்றார்களா? என்று கேட்கும் அளவுக்கு நம் மன்றம் அனைத்து மலபார் வாழ் காயலர்களை ஒரே இடத்தில ஒன்றுகூட்டி அவர்களையும், இணையதளம் மூலம் நம் நிகழ்ச்சியை பார்த்த நம் சொந்த பந்தங்கள் அனைவரையும் மட்டில்லா மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!! மேலும் நம் மன்றம் இதே போன்று ஒற்றுமையாக செயல்படவும், நகர்னலப்பனிகள் சிறப்புடன் நடந்திடவும், நாம் அனைவரும் இறைவனிடம் துஆ செய்ய வேண்டுமென்றார்.
கூட்டத்தின் நிறைவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அடுத்த பொதுக்குழு:
எமது மன்றின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி அளவில் மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - மருத்துவ உதவி:
மருத்துவ உதவி கோரி நமதூர் காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் முறைப்படி விசாரித்து உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நிறைவாக அனைவரின் துஆவுடன் கூட்டம் சிறப்புடன் நிறைவுபெற்றது எமது செயற்குழுக் கூட்டம், அல்ஹம்துலில்லாஹ்! இக்கூட்டத்தில் எம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யித் ஐதுரூஸ் (Seena),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம்,
கோழிக்கோடு, கேரள மாநிலம். |