காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாணவ பேரவை துவக்க விழா 05.09.2012 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இரண்டாமாண்டு வணிக நிர்வாகவியல் மாணவி ஏ.ஷர்மிளா பானு கிராஅத் ஒதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, தகவல் தொழில் நுட்பத் துறை தலைவியும், மாணவியர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஜெ.ஷர்மின் மேரி ஜானகி வரவேற்புரையாற்றினார்.
தமிழ்த்துறை தலைவியும், கல்லூரி முதல்வர் பொறுப்பாளருமான இரா. அருணா ஜோதி உறுதிமொழி வாசகங்களை முன்மொழிய, கல்லூரி மாணவியர் பேரவையின் தலைவி மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி எஸ்.ஹவ்வா நஜாஹா நவ்ஸீனும், துணைத் தலைவி இரண்டாமாண்டு பொருளாதாரம் துறைச் சார்ந்த மாணவி ஆ.முருகேஸ்வரியும், செயலாளரான இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி டி.கீர்த்திகாவும், துணைச் செயலாளரான முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி என்.ஃபஜீலாவும் வழிமொழிந்தனர்.
பின்னர், கல்லூரி மாணவியர் பேரவையில் தலைவி மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி . எஸ்.ஹவ்வா நஜாஹா நவ்ஸீன் உறுதிமொழி கூற, பல்வேறு மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவியரும், துணைத் தலைவியரும் வழிமொழிந்தனர்.
மாணவியர் பேரவையில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவியரையும் கல்லூரி செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், கல்லூரி இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி ஆகியோர் வாழ்த்தினர்.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற வரலாற்றுத்துறை தலைவியான பேராசிரியர் ஜாஸ்மின் ராபர்ட்சன், மாணவியர் தங்களது தலைமை பண்புகளை வளர்க்க தனித்தன்மைகளை தாங்களே, ஆசிரியர் உதவியுடன் வளர்க்க வேண்டும் என்று சிறுகதைகள் மூலம் எடுத்துக் கூறினார்.
இவ்விழாவில், கல்லூரியின் நிர்வாகிகள், அனைத்துத் துறை பேராசிரியர்கள், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
கல்லூரி மாணவ பேரவையின் தலைவி மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி எஸ்.ஹவ்வா நஜாஹா நவ்ஸீன் நன்றி கூற, மூன்றாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல் மாணவி எஸ்.எச். ஆயிஷா கதிஜா துஆவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
அன்று மாலை ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களின் விவாத மேடை நடைபெற்றது. மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
விழா ஏற்பாடுகளை, தகவல் தொழில் நுட்பதுறை தலைவியும், மாணவ பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஜெ.ஷர்மின் மேரி ஜானகி செய்திருந்தார். |