குற்றாலத்தில் நடப்பாண்டு ரமழான் மாதம் துவங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே சீசன் துவங்கியது. சீசன் காலத்தில் வழமையாக கூட்டங்கூட்டமாக குற்றாலத்திற்குச் சென்று வரும் காயலர்கள், நடப்பாண்டில் ரமழான் - நோன்பு மாதம் துவங்கியதிலிருந்து அங்கு செல்வதைத் தவிர்த்துக்கொண்டனர்.
இந்நிலையில், தற்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதையும், சீசன் களை கட்டுவதையும் கேள்வியுற்ற காயலர்கள், மீண்டும் கூட்டங்கூட்டமாக குற்றாலத்தை நோக்கி செல்லத் துவங்கியுள்ளனர்.
காயல்பட்டினம் தைக்கா தெரு, மகுதூம் தெரு, புதுக்கடைத் தெரு, குத்துக்கல் தெரு, சதுக்கைத் தெரு, நெய்னார் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் குற்றாலத்தில் முகாமிட்டு இன்பக் குளியலை அனுபவித்து வந்த காட்சிகள்:-
|