காயல்பட்டினம் - ரத்தினபுரி ஏ.கே.எம். நகரில் இருந்து செயல்படும் துளிர் சிறப்பு குழந்தைகள் சமீபத்தில் காயல்பட்டினம் கடற்கரைக்கு குழுவாக பயணம் மேற்கொண்டனர். அது குறித்து அப்பள்ளிக்கூடம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நமதூர் கடற்கரைக்கு துளிர் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் - துளிரின் பெற்றோர் மன்ற தலைவி ஆயிஷா சாஹிப் தம்பி அவர்களால் ஆகஸ்ட் 31, 2012 அன்று அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகளை உற்சாகப்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டி, கபடி போட்டி, பாட்டு போட்டி ஆகியவை நடைபெற்றது. குழந்தைகள் மிகவும் உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டனர். செயலர் ஷேக்னா லெப்பை வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஜனாப் சாஹிப் தம்பி அவர்கள் குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் வழங்கி அவர்களின் உற்சாகத்தில் பங்கேற்றார். பின்பு சிறிது நேரம் குழந்தைகள் விளையாட வைக்கப்பட்டனர். இறுதியில் வாடா மற்றும் தேநீர் வழங்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். துளிரின் நிறுவனர் வக்கீல் அஹ்மத் அவர்கள் மாதம் ஒரு முறை இதுபோன்ற பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதன்படி - இனி அவ்வாறு செயல்படுவோம் என்று துளிரின் பணியாளர்கள் அனைவரும் உறுதி அளித்தனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |