காயல்பட்டினத்திற்கு மேல ஆத்தூரில் இருந்து வழங்கப்படும் குடிநீர் - பல ஆண்டுகளாக குறைந்தளிவிலேயே மக்களை சென்றடைகிறது. தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் தண்ணீர் இயல்பான காலங்களில் 20 லட்ச லிட்டருக்கு மேலாகவும், தற்போது நிலவும் தட்டுபாடு நிலையில் 12
லட்ச லிட்டர் அளவிலும் உள்ளது. இருப்பினும் ௦ காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் - குடிநீர் வடிகால் வாரியம் கூறும் அளவை விட - 3 - 5
லட்ச லிட்டர் அளவிற்கு குறைவாகவே தண்ணீர் வருவதாக பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
உண்மை நிலையை அறிந்துக்கொள்ள நகர எல்லையில் மீட்டர் அறை நிறுவப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, மீட்டர் அறையும் தயார் நிலையில்
உள்ளது. இருப்பினும் அறை அமைந்திருக்கும் நிலம் வழக்குக்கு உட்படுத்தப்பட்டதால், மீட்டர் அறை செயல்படாமல் இருந்தது. தற்போது - இது
குறித்த வழக்கின் தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
காயல்பட்டினத்திற்கு குறைவாக தண்ணீர் வந்தடைவதாக கூறப்படுவதை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள்
பாண்டியராஜன் (செயற் பொறியாளர்) மற்றும் பாலசுப்ரமணியம் (துணை பொறியாளர்) ஆகியோர் செப்டம்பர் 5 அன்று காயல்பட்டினம் வந்திருந்தனர்.
மேல ஆத்தூரில் இருந்து காயல்பட்டினம் வரை வரும் குழாயில் தாங்கள் எந்த கசிவையும் கண்டறியவில்லை என அவர்கள் தெரிவித்தனர். நகரில்
தான் - பம்பிங் மெயின் இணைப்பிலிருந்து தவறுதலாக குடிநீர் உரியப்படுகிறதா என கண்டறிய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
8 அடிக்கு 8
அடி அளவில் அமைக்கப்பட்டுள்ள மீட்டர் அறையை பார்வையிட்ட அவர்கள் - அளவு மீட்டர் பொருத்தினால் உண்மை நிலவரம் தெரியும் என கூறினர்.
வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் - ஒரு மாதத்திற்குள் அளவு மீட்டர் பொருத்தி விடலாம் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேல ஆத்தூரில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் - நகரில் முதலில் அமைக்கப்பட்ட 4 தண்ணீர் தொட்டிகளுக்கு மட்டும் தண்ணீர் ஏற்றும் திறன்
கொண்டே அமைக்கப்பட்டதாகவும், பிறகு பல திட்டங்கள் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட 15 தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றும் திறன் இல்லை
என்றும் கூறினர். ஆகவே - மேல ஆத்தூரில் இருந்து பெறப்படும் தண்ணீரை நகரில் ஒரு தொட்டியில் (SUMP) சேமித்து, மீண்டும் பிற
தொட்டிகளுக்கு அனுப்பலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆணையர் அசோக் குமார், வார்ட் 15 உறுப்பினர் கே.ஜமால், நகராட்சி பிட்டர் நிசார் அஹமத் ஆகியோர் இருந்தனர். |