நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்காக, காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், இம்மாதம் 03ஆம் தேதி திங்கட்கிழமையன்று (நாளை மறுநாள்) ஹஜ் கிரியைகள் விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அனுபவமிக்க மார்க்க அறிஞர்களால் (உலமாக்களால்) ஹஜ் கிரியைகள் குறித்த விளக்க நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
பெண்களுக்காக, ஆஸாத் தெருவிலுள்ள ஜரூக்குல் ஃபாஸீ பெண்கள் தைக்கா (நெய்னாப்பா தைக்கா)வில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருப்போர் இவ்வரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இத்தகவலை இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து ஹாஜிகளுக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் கலந்துகொள்ளச் செய்யுமாறும் ஜாவியா நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் - நடப்பாண்டின் ஆண் - பெண் ஹஜ் பயணியருக்கு மட்டும் மதிய உணவு விருந்துபரிசப்பு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்விடம் வர இயலாத பொதுமக்கள் - குறிப்பாக ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருப்போரின் வசதிக்காக, இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, ஜாவியாவின் www.kayalpatnamzaviya.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது.
|