ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் மாமனார் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த செல் எம்.ஐ.செய்யித் மூஸா காதிரீ இன்று நள்ளிரவு 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78.
அன்னார், மர்ஹூம் எம்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் மகனும்,
மர்ஹூம் ராவன்னா மீரா நெய்னா அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் ஹாஜி செல் எம்.ஐ.காஜா முஹ்யித்தீன், மர்ஹூம் செல் எம்.ஐ.முஹம்மத் அன்வர், ஹாஜி செல் எம்.ஐ.முஹம்மத் அன்ஸாரீ (மதீனா), மர்ஹூம் செல் எம்.ஐ.ஷேக் அப்துல் காதிர், செல் எம்.ஐ.முஹம்மத் அபூபக்கர், மர்ஹூம் எம்.ஐ.சாமு ஷிஹாபுத்தீன், மர்ஹூமா செல் எம்.ஐ.கதீஜா பீவி, மர்ஹூம் ஹாஜியானி செல் எம்.ஐ.செய்யித் ராபியா ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜியானி ஆர்.எம்.என்.ஹலிமுத்து என்பவரின் கணவரும்,
ஹாஜி ஆர்.எம்.என்.ஷேக்னா என்பவரின் மைத்துனரும்,
ஹாங்காங்கிலிருக்கும் ஹாஜி செல் எஸ்.எம்.கே.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜியானி செல் எஸ்.எம்.கே.மொகுதூம் மர்ழிய்யா ஆகியோரின் தந்தையும்,
ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம், ஹாஜியானி சாளை மும்தாஜ் ஆகியோரின் மாமனாரும்,
ஹாஜி எம்.எஸ்.எச்.அஹ்மத் மீராத்தம்பி (மக்கா), ஹாஜி எம்.எஸ்.எச்.முத்து இஸ்மாஈல் (‘நட்புடன்’) ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
1. Re:... posted byP.S.ABDUL KADER (KAYALPATNAM)[01 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21641
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்..
3. ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் மகனாருடன் சந்திப்பு! posted byS.K.Salih (kayalpatnam)[01 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21643
மறைந்த பெரியவரின் எல்லா பாவப்பிழைகளையும் கருணையுள்ள அல்லாஹ் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கியருள்வானாக...
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் - குறிப்பாக என் தோழப்பா மகன் சாளை ஷேக் ஸலீம் காக்கா,மர்ஹூம் அவர்களின் மகனார் ஹாஜி செல் எஸ்.எம்.கே.முஹம்மத் இஸ்மாஈல் காக்கா, நண்பர் ‘நட்புடன்’ முத்து இஸ்மாஈல் உள்ளிட்டோருக்கு எனது அன்பார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
எல்லாம்வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் ஸப்ரன ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
மர்ஹூம் அவர்களின் மறைவையொட்டி, நாளை 02.09.2012 மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் - கவ்லூன் பள்ளி வளாகத்தில் அவர்களது மகனாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு்ள்ளதாக, மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
14. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[01 September 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21657
இன்னா-லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.
கனத்த உருவம், இளகிய மனது, அனைவர்களுடமும் அன்புடன் பழகும் பண்பு, என்றும் சிரித்த முகம்.... இன்னும் மனக்கண்ணில் அவர்களின் உருவம் ஓடிக்கொண்டே இருக்கின்றது.. அதிலும் அவர்களின் புகைப்படத்தையும் பதிவு செய்ததால் கூடுதல் மன ஓட்டம்.
நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம் அவர்களை அவ்வளவு ரசிப்போம், அவ்வளவு அழகு. அவ்வளவு பெர்சனாலிட்டி. மாஷா அல்லாஹ்.
வல்ல ரஹ்மான் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, உயர்ந்த பதவியை சுவனத்தில் அருள்வானாக.
குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
15. Re:... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[01 September 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21658
Condolence
Very sad news. Allah will accept his good deeds and forgive his sins.Almighty will provide paradise for him .Convey my sympathy all the family numbers.(Saborun Jameel)
16. Re:... posted byEjaz Ahamed (Dubai)[01 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21659
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் குறிப்பாக ஹாஜி சாளை ஷேக் ஸலீம் காக்கா, மர்ஹூம் அவர்களின் மகனார் ஹாஜி செல் எஸ்.எம்.கே.முஹம்மத் இஸ்மாஈல் காக்கா, நண்பர் ‘நட்புடன்’ முத்து இஸ்மாஈல் உள்ளிட்டோருக்கு எனது அன்பார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
எல்லாம்வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
17. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ... posted byA.S.L.SULAILAIMAN (RIYADH - SAUDI ARABIA)[01 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21660
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
எல்லோருடனும் பழக மிக இனிமையனவர்.
வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதிஇணை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.
அன்னாரை பிரிந்து வாடும் நண்பர் சலீம், மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்.
18. செல் எம்.ஐ. செய்யித் மூஸா காதிரீ அவர்கள் இன்று நள்ளிரவு 03.00 மணியளவில் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். posted byAbu Ahmadh Sona & Family (Ar Riyadh - KSA)[01 September 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21661
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கியருள்வானாக ஆமின்...
24. Re:...நம்ப முடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் posted bymackie noohuthambi (kayalpatnam)[01 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21669
நாங்கள் ஒவ்வொரு வேளை ஜமாஅத் தொழுக போகும்போது அல்லது திரும்பி வரும்போது எப்படியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வோம். அவர்கள் வாயிலிருந்து வெளி வரும் வார்த்தை "துஆ செய்துகொள்ளுங்கள்".எனது பதில் "அல்லாஹ் நாள்ல சுகத்தை தருவான்".
நோன்பு பூராவும் ஆறு நோன்பிலும், ஏன் நேற்று ஜும்மாவிலும் சந்தித்த ஞாபகம். மக்ரிப் தொழுகையில் கலந்து கொண்டவர்கள் அவர்களுடன் பேசியிருக்கிறார்கள்.
படுக்கையில் படுக்கவில்லை. தனக்கு நோய் உள்ளதாக யாரிடம் சொல்லவும் இல்லை. வழக்கம் போல தனக்கே உரிய மிடுக்குடன் அவர்கள் நடந்து வரும்போது யார்தான் அவர்கள் உடல்நிலை பற்றி சந்தேகம் கொள்ள முடியும். ஆனாலும் அல்லாஹ்வின் அழைப்பு எந்த நேரத்தில் வரும் என்று யார் அறிவார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை பொருந்திக்கொள்வானாக. அவர்கள் பாவங்களை மன்னித்து அருள்வானாக. அவர்கள் மண்ணறையை ஒளிமயமாகவும் விசாலமானதாகவும் ஆக்கி வைத்து மேலான சுவர்க்க பதவியை கொடுப்பானாக.
அவர்கள் புன்னகை பூத்த முகத்தையும் நல் இதயத்தையும் தங்களிடமிருந்து இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து, "ஜென்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுப்பானாக.ஆமீன். அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் பொறுமையை கொடுப்பானாக. அனைவர்களுக்கும் என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
28. السلام عليكم و رحمت الله و بركاته posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[01 September 2012] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21674
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்
السلام عليكم و رحمت الله و بركاته
M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு
41. INNA LILLAHI.... posted byABU AASIYA MARYAM (HONG KONG)[01 September 2012] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 21687
BISMILLAH....ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON."MAY ALMIGHTY ALLAH FORGIVE HIS SINS,ACCEPT HIS DEEDS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS"
43. Re:... posted byM.S. Shah Jahan (Kayalpatnam)[01 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21690
காதிரி காக்கா அவர்களை சிறு வயது முதல் நான் அறிவேன். நேற்று மொகுதூம் பள்ளியில் எனக்கு முன்பாக ஜும்மா தொழுகையில் ஈடுபட்டு இருந்தார். மன்னர் என்றே என்னை அழைப்பார். பெரிய அதிர்ச்சி. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
M.S. Shah Jahan
President, Kawalanka
Colombo. Sri Lanka.
47. Re:... posted bySyed Muhammed Sahib Sys (Dubai, UAE.)[01 September 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21697
إنّـا لله وإنا اليــه راجعــــــــون
வல்ல அல்லாஹ் மர்ஹூமவர்களை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து வாடும் சொந்தங்களுக்கு சப்ருன் ஜமீலை கொடுத்தருள்வானாக, آميـــــــــــن
48. Re:... posted byS S ABDULLAH (Dubai)[01 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21698
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நான் சிறுவனாக இருந்த சமயம் அவர்களின் கரங்களில் என்னை தூக்கி விளையாடியது இன்றும் நினைவில் உள்ளது. அவர்களது கம்பீரநடை, கணீர் குரல், அவ்வளவு அழகு. அவ்வளவு பெர்சனாலிட்டி. மாஷா அல்லாஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை பொருந்திக்கொள்வானாக. அவர்கள் பாவங்களை மன்னித்து அருள்வானாக. அவர்கள் மண்ணறையை ஒளிமயமாகவும் விசாலமானதாகவும் ஆக்கி வைத்து மேலான சுவர்க்க பதவியை கொடுப்பானாக. ஆமீன்!
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்
பாயிசீன் சங்க படியின் ஒரு அழகிய நபரை இழந்துவிட்டோம்.
கன்னம் குழி விழும் அழகிய சிரிப்பும், கணீரென்ற குரலும் கம்பீரமான தோற்றமும் ( WITH SHINING WALKING STICK )
"துவா செய்மா" என்று எப்போது சந்தித்தாலும் அவர்கள் சொல்வதும் என் மனக்கண் முன் வந்து விட்டது.
குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.
55. Re:... posted bySeyed Ibrahim S.R. (Dubai)[02 September 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21717
Innallillahi Wa Inna Ilaihi Rajioon. May Almighty Allah forgive all his sins and grant him paradise (Jannathul Firdous) in the Aahir. May Almighty Allah provide 'Sabrun Jameela' to the decesaed family members.
57. Re:... posted byMohammed Hanafi (Dubai)[02 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21723
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
கம்பீரமான தோற்றமுடையவர்! எப்பொழுதும் கேலிப் பேச்சில் அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பார். அன்னாரின் பிரிவு எங்கள் அனைவரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!.
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகள் பொறுத்து பாவங்களை மன்னித்து அவர்கள் கபூரை ஒளிமயமான சுவனப் பூன்ஜோளையக்கி நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் மேலான பதவியை தந்தருல்வானாக! ஆமீன்!
58. வருந்துகின்றோம்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், ( புனித மக்கா. )[02 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21733
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிய்யூன்.
அல்லஹ் இவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப்பதியை வழங்கியருள்வானாக! ஆமீன். மர்ஹூமின் மனைவி,மக்கள், உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்து மேலாக்கி வைத்தருள்வானாக!
59. Re: Demise of Khadhiry Kaka posted byAbul Hassan (MORDEN, UK)[02 September 2012] IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 21736
Salaamun Alaikum,
I am very shocked hear the death of beloved friend of My Dad Haji Khadhiry. May Almighty Allah (swt) forgive his short comings and accept all his good deeds and allow him enter the highest status in the Jannathul Firdous ul Ahla inshaallah.
May Almighty Allah provide sabarun Jameel to all his families including my Nephews Salai Saleem, Salai Mumtaj and his son Ismail kaka and Dghtr Mogudoom Marliya and all his grand childrens.
I take this opportunity to extend deepest condolences to all the relatives once again. Wassalaam,
60. நெஞ்சார்ந்த நன்றிகள் !!!! posted bySalai Sheikh Saleem (Kayalpatnam)[08 September 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 21964
அருளாளன் அன்புடையோன் இறையேகன் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மர்ஹூம் அவர்களின் வாபாத்து செய்தி அறிந்து எங்களுக்கு இந்த இணைய தளம் மூலமாகவும் தொலை பேசி வாயிலாகவும் இரங்கல் செய்தி பதிவு செய்து மர்ஹூம் ஹக்கில் துஆ செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், மேலும் அன்னாரின் நல்லடக்கத்தின் போது எங்களுடன் தோள் கொடுத்து இறுதி வரை எங்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் அளித்த குடும்பத்தார்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், மற்றும் ஹாங்காங் கில் வைத்து நடைபெற்ற சலாத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் குடும்பத்தார்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். ஜசாக்கல்லாஹு அல்ஃப் ஹைரா..
நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த இந்த கருமத்தை பொறுத்துக்கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுடன் நாங்கள் கேட்கும் துஆக்களை கபூல் செய்து மர்ஹூம் அவர்களின் பிழைகள் எல்லாம் அவனது சந்நிதியில் பொருத்துக்கொள்ளப்பட்டு அன்னார் மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க செய்வானாகவும். ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
மேலும் அந்த வல்ல நாயன், நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நோயற்ற நெடிய வாழ்வினையும் தந்து போதுமான அளவிற்கு செழிப்புள்ள வாழ்க்கையும் தந்தருளவும், நாம் அனைவரும் கடைசிவரை ஈமான் சலாமத்தோடு இறை காட்டிய மறை வழி நின்று அவன் நேசர்களாகவே மரணிக்கவும் அருள் பாளிப்பானகவும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross