கடந்த 30.07.2012 அன்று அதிகாலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையத்தைத் தாண்டிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணிக்க வணிகர் வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் உட்பட ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த ரெயில் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதனடிப்படையில், காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவிலுள்ள விளக்கு முஹ்யித்தீன் இல்லத்திற்குச் சென்ற திருச்செந்தூர் வட்டாட்சியர் சங்கர நாராயணன், அவரது குடும்பத்தாரிடம் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ், 17ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் மற்றும் பலர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
[படம் அகற்றப்பட்டது @ 16:08/01.09.2012] |