Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[03 September 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21751
அஸ்ஸலாமு அழைக்கும் ஷாஜஹான் காக்கா .
உங்கள் கட்டுரையின்மூலம் ஊரில் பிரச்சினைகள் எதனால் என்பதை நன்றாகவே உணர முடிகிறது .
நீங்கள் குறிப்பிட்டதுபோல் " தலையாய பிரச்சினைகள் " என்று பல உள்ளது . ஊரெங்கும் குப்பை கூளங்கள் , தண்ணீர் பிரச்சினை ! யார் காரணம் ? தலைமையின் நிர்வாகத்திரமையின்மையே காரணம் . இதைப்பற்றி பலமுறை ஊடகத்தின் கருத்துப்பதிவின் மூலம் என்போன்ற பலரும் தலைமைக்கு எட்ட வைத்தார்கள் . பலன் , பூஜ்யம்தான் .
அடுத்து , நீங்கள் குறிப்பிட்ட " நெட் " பிரச்சினை .ஒவ்வொரு கூட்டத்திலும் கூச்சல் குழப்பங்கள் இருக்கத்தான் செய்தன . ஆனால் அப்போதெல்லாம் தலைவியின் ஆதரவு " நெட் " மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது . அதனால் உங்களுக்கு , உள்ளே நடக்கும் நிகழ்வுகள் சரிவர தெரியாமல் போயிற்று .இன்றோ மீடியாக்கள் பலரும் வந்ததால் இவற்றை மீன் சந்தை , கள்ளுக்கடை என்று விமர்சிக்கிறீர்கள் .
அடுத்து , மிகவும் கண்டிக்கத்தக்கது , தலைவி மீடியா மக்களை " அழையா விருந்தாளிகள் " என்று சொன்னது . இவ்வளவு நாட்களாக தன்னுடைய ஆதரவு மீடியா அங்கு சென்று செய்தி செகரித்ததே , அவர்களை யார் அழைத்தார்கள் .
நீங்கள் குறிப்பிட்ட ஒழுக்க நெறி , தரக்குறைவு ..... வீடியோவில் பார்த்தது உண்மைதான் . இதற்கு யார் காரணம் ? தலைமை , உறுப்பினர்கள் எண்ணங்களின் பெரும்பான்மைக்கு ஒத்துப்போகாததுதான் . சரியோ , தவறோ , பெரும்பான்மையோடு சேரவேண்டும் . இல்லையேல் எந்த பணியும் நடக்காது .
தலைவியின் அனுபவமின்மைக்கு ஒருசில எடுத்துக்காட்டுகள் .( a ) ஏலம் விடுவதில் நடந்த குளறுபடிகள் . அதிக தொகைக்கு கொடுத்துவிட்டோம் என்று தன் ஆதரவு மீடியா மூலம் செய்தியை வெளியிட்டு , மக்களை நம்பவைத்து முட்டாளாக்கியது .
( b ) சமீபத்தில் தண்ணீர் பிரச்சினை பற்றி ஊரே அல்லோலப்பட்டிருக்கும்போது ,அதுவரை சும்மா இருந்த தலைவி , ஒரு அரசியல் கட்சி ஆர்பாட்டம் நடத்தும்போது , யாரோ கொடுத்த யோசனையால் " நகராட்சி விளக்க நோட்டீஸ் " தன்னிச்சையாக விநியோகித்தது .
ஆட்டுக்குட்டி ...... அஞ்சாத ஆட்டுக்குட்டிதான் . ஆம் , ஆதரவு ஜால்ராக்கள் எப்போதும் ஆட்டுக்குட்டியை சுற்றி சுற்றி வருவதால் ஆட்டுக்குட்டிக்கு பயம் வராது .
" நீ ராஜினாமா செய்டீ " மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை.
இறுதியாக ,
" ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதவரும் உண்டோ " உண்மைதான் காக்கா . இந்த தலைவியை ஜால்ராக்கள் பலர் ஆட்டுவிக்கின்றனர் . இவரும் , அவர்களின் பேச்சை கேட்டு ஆடுகின்றார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross