Time to show the backdoor to these unfit counselors !! posted bySalai.Mohamed Mohideen (USA)[03 September 2012] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 21755
கடந்த ஒரு வாரமாக உலக தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய பாரம்பரிய மிக்க கண்ணிய காயலை பற்றிய செய்திகள் தான் ஈ - மெயில்கள், பேஷ் பூக்கிலும் & இணைய தளங்களிலும் உலா வந்து கொண்டிருக்கின்றது. நகர்மன்றத்தின் செயல்பாடுகள் உலக வாழ் காயலர்கள், தமிழ் முஸ்லிம்கள் மட்டுமன்றி மாற்று மத சமூக ஆர்வலர்களாலும் கூட அவதானிக்கப் படுகின்றது என்பதனை உறுப்பினர்கள் முதலில் உணர வேண்டும்.
ஊருக்கோ அல்லது நம் மக்களுக்கு கடமை செய்யா விட்டால் கூட பரவாயில்லை. தயவு செய்து நமது முன்னோர்கள் சான்றோர்கள் கட்டிக்காத்த கண்ணியத்தை ஊர் பெருமையை உங்களின் இது போன்ற மிகக் கேவலமான அருவருப்பான வார்த்தை - நடவடிக்கைகளால் நமதூருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதே ஒரு சாதாரண (அடி மட்ட) ஊர் பற்று மிக்க 'காயலானின்' வேண்டுகோளாக இருக்கும்.
ஒருவேளை நகர் மன்றத் தலைவர் பண பலமிக்கவராக அல்லது பண பலமிக்க குடும்பத்தை சார்ந்தவராக அல்லது அதிகார வர்க்கத்தின் 'ஆசியை' பெற்றவராக இருந்திருந்தால்... இது போன்ற ' அச்சுறுத்தலை தொடர்ந்து' உங்களால் தந்து கொண்டிருக்க முடியுமா? வாய்கள் பண மழையால் அடைக்கப் பட்டிருக்கும் அல்லது 'இரும்புக்கரம்' கொண்டு எப்பொழுதோ ஒடுக்கப் பட்டிருப்பீர்கள் அல்லவா???.
அந்தோ பரிதாபம்... நம்முடைய நகர்மன்ற தலைவர் ஒரு சாதாராண நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்... அதுவும் பெண்ணாகி போய் விட்டார். இவர், மகா ஜனத்தினால் தேர்ந்தெடுக்க பட்டு என்ன பயன்? இதோ இந்த கவுன்சிலர்கள் கையிலும் அதிகார வர்க்கத்திடம் சிக்கி சின்னப்பின்னமாகி நெருக்கடிக்குள் தள்ளப் பட்டு விட்டார். இவர் கரையேற நம்மில் உதவிக்கரம் நீட்டபோவது யாரோ ?
ஒரு ஆண் சக உறுப்பினரை பார்த்து... துனைத்தலைவரின் & வார்டு உறுப்பினர்களின் 'அச்சமூட்டி எச்சரிக்கும்' (கிட்டத்தட்ட அடித்து விடும் அளவுக்கு) அசைவு படங்களை பார்க்கும் நமக்கே கொஞ்சம் அச்சத்தை தருகின்றதென்றால்... நகர் மன்ற தலைவிக்கு & அங்குள்ள நம் குல பெண்களின் பாதுகாப்பிற்க்கு யார் கியாரண்டி???
இதையெல்லாம் 'கலாச்சாரப் புகழ் (கள்)' கூட 'அமைதி' காத்தததன் ரகசியம் அவரை மற்றொரு உறுப்பினர் ... வெளியே வாங்க வெளிநடப்பு செய்வோம் என்று அவசரப்படுத்துவதில் இருந்தே தெரிகின்றது.
சட்ட /நாடாளு மன்றத்தை போன்று, நகர்மன்ற அவையை அவமதிப்பவர்களை அப்படியே அலேக்காக தூக்கி .... எதாவது சட்டத்தில் இடம் உள்ளதா????
இப்பிரச்சனை தீர சுலபமான ஒரு வழி. இவர்களைனவரும் விரும்புவது போல இவர்களை ஆட்டுவிக்கும் சக்தியை தலைவி ஒரு விசிட் அடித்து கும்பிடு போட்டு & முந்தைய காலங்களை போல் 'ஊழலை' கண்டும் காணாது ... தனது கரங்களை மட்டும் சுத்தமாக வைத்து விட்டால் போதும் !!
நடப்பைவகளை நடு நிலையாக கவனித்து சிந்தித்து பார்த்தால் இங்கே நடக்கின்ற போராட்டம் ஏதோ 'சத்தியத்திட்க்கும் அசத்தியத்திட்க்கும்' நடக்கின்ற போராட்டம் போன்ற உணர்வை நம்மில் பலருக்கும் ஏற்படுத்து கின்றது. 'திட்டமிட்டது' போல் ஒரு வருடம் கழித்து தலைவியின் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்து அப்பதவிக்கு ஒரு டம்மியை கொண்டு வந்து விட்டால்.... 'ஜனநாயகம்' செத்து மடிந்து காயலின் நகர்மன்ற பதவி என்றாலே காசு கொட்டும் மரம் என்று வரலாறு மாற்றி எழுதப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை தருகின்றது.
அதற்க்கு ஒருக்காலும் அனைத்து காயல் நலமன்ற தலைமை, அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், நடுநிலை ஊடகங்களும் மற்றும் ஊர் அன்பர்கள் வழி விடக் கூடாது. ஒன்றிணைந்து ஒரு இணக்கத்தை ஏட்படுத்தி அல்லது இதனை அவர்கள் வழியிலேயே எதிர் கொள்வது தான் சாலச்சிறந்தது .
இக்கூட்ட 'அவை நிகழ்வுகளை' மட்டுமன்றி அனைத்து கூட்ட நிகழ்வுகளையும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவு செய்தால் மிகவும் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross