எங்கே செல்லும் இந்த பாதை யார் தான் இதை அறிவாரோ posted byS.A.MUHAMMAD ALI (Dubai)[03 September 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21798
மாதமொரு முறை கூட்டம், மக்கள் மனதில் ஏமாற்றம். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவார்கள் என்று பார்த்தால், அடிதடி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். உலகெங்கும் பறந்து விரிந்து சொந்த பந்தங்களை பிரிந்து பணி செய்யும் நம் மக்கள் ஊருக்கு ஒரு நற்பணி மன்றம் வைத்து உதவிகள் பல செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கே நடக்கும் காட்சிகளை பார்த்தால் முதலில் இதற்கு தான் அணைத்து உலக காயல் நல மன்றங்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தண்ணீர் இல்லாமல் கிணற்று தவளைகள் கூட கதறுவதில்லை. ஆனால் இங்கே இவர்கள் போடும் கூப்பாடு இந்த நகராட்சி மன்றம் தேவைதானா என்று கேட்க தோன்றுகிறது.
தண்ணீர் நீ எங்கே?: அங்கே அண்டை மாநிலத்தார் அணைகட்டி தடுக்கிறார்கள். நடுவில் யாரோ திருடுகிறார்கள். பருவத்தில் நீ வானிலிருந்தும் வராது ஏமாற்றினாய் இங்கே இவர்கள் நடத்தும் நகராட்சியை பார்த்து எங்கள் கண்ணில் இருந்து நீ மழையாய் வருகிறாயே. இது என்ன நியாயம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross