விதைத்தோம் அன்று...! விருட்சமாக வளர்ந்து நிழல் தருகின்றது இன்று...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[04 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21805
பல வருடங்களுக்கு முன் மஹான்-காழி அலாவுத்தீன் அப்பா தர்ஹாவின் நீண்ட திண்டுகளில் இருந்து கொண்டு நானும் அன்புச் சகோதரர் சலாஹுத்தீன், குளம்-ஜமால் இன்னும் பல இளைஞர்களும் சேர்ந்து ஊருக்கு ஏதாவது நம்மால் இயன்ற என்மையைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு குட்டி அறைக்குள் அலுவலகம் அமைத்து அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தைத் துவக்கினோம். நாளொரு மேனி பொழுதொரு வண்னமாக அமைப்பு வளர்ந்து வந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் (திருமதி சிவகாமி என நினைக்கின்றேன்) அவர்களை அழத்து வந்து விழா நடத்தினோம்.காயல் ஏ.தர்வேஷ் முஹம்மதையும் இனைத்தோம். இன்னும் பலர் இணைந்து களப்பணியாற்றினர். பெரியோர்களின் ஆதரவும், ஆசியும் மென் மேலும் அமைப்பிற்கு வலு சேர்த்தது.
காலப்போக்கில் பலரும் வேலை நிமித்தம் வெளிநாடு சென்று விட்டனர். இருப்பினும் இன்றைய இளையதலை முறையினர் உணர்வோடும், உற்சாகத்தோடும் இந்த ஊர் நல அமைப்பை மிகச் சிறப்பாக நடத்தி வருவது பெருமையாக உள்ளது. தற்போதைய செயல்வீரர்களில் தம்பி முஹம்மது முகைய்யத்தீன் போன்றோரது அசாத்திய திறமை மற்றும் அனுபவங்களைக் கண்டு நான் வியந்ததுண்டு!
அல்லாஹ்வின் கருணையால் இந்த அமைப்பு மென்மேலும் உயர்ந்து ஊர்மக்களுக்கு இன்னும் பல நன்மைகளைச் செய்ய மனதார வாழ்த்துகின்றேன்.
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross