Re:...முத்தான மூன்றாவது முறையும் மாநகராட்சி முடக்கம் . posted bykalava aboobacker (Yanbu (KSA))[04 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21820
முத்தான மூன்றாவது முறையும் மாநகராட்சி முடக்கம் .
வீர வசனம் பேசி உறுப்பினர்கள் வெளிநடப்பு.
இவ் வேதனை செய்திகளுக்கு ஒரு வடிகாலே வராதா?
ஒரு விடிவு காலமே பிறக்காதா?
இந்த அட்டூழிய அத்து மீறல்களும்,அதைதட்டி கேட்க
ஆள் இல்லை என்ற இறுமாப்பும் இவர்களுக்கு எப்படி வந்தது?
இவர்களின் பக்கபலமாக பெரிய சக்திகளின் பினாமிகள் பம்பரம்போல் சுழன்று தேடிசென்று திருப்தி படுத்துகிறார்கள் என்ற தைரியம் தானே!
ஊரை ஒற்றுமைபடுத்தவும் ,ஊர் மக்கள் நலனுக்காகவும் நாம் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு பொருள் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்கள் வாழ்ந்து மறைந்த (இன்றும் நம் மனசாட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும்) வரலாற்று புகழ் மணக்கும் புண்ணிய ஊர்தான் நம் காயல்பதி!
இப்புண்ணிய பூமியில் இன்றும் சிலர் நமக்கிடையே பிளவை ஏற்படுத்தி,ஒற்றுமைக்காக உழைக்க முயற்சிப்பவர்களை ஓரம் கட்டி,அவர்களெல்லாம் அந்த அணி,இந்த அணி என்று நம்மை பிரித்தாளும் கூட்டம் கூத்தாடி கொண்டாடி கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?
அவர்களுக்கு அவ்வப்போது அகம்மகிழ மடியில் விழும் மாணியம் தான். தீர்க்கமான சிந்தனை திறனாலும்,தளராத முயற்சியாலும் தேடிபெற்ற செல்வத்தை இப்படி சிதறடிக்கிறீர்களே,சிறிது கனமாவது சிந்தித்தீர்களா?
இது நமக்குள்ள மானப்பிரச்சனை,இவர்களெல்லாம் நம்மை எதிற்பதா? இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான் என்ற வெறுப்புணர்வை உங்கள் உள்ளத்தில் வளரவிட்டு வேடிக்கைபார்க்கும் வீணான கூட்டத்தோடு தயவு செய்து கிஞ்சித்தும் கலந்தும் விடாதீர்கள்,உங்கள் காசை கரியாக்க நீங்களே காரணமாகவும் ஆகி விடாதீர்கள்.
ஊர்மக்களின், ஊர்மக்களால், ஊர்மக்களுக்காக செயல்படும் பேரவை என்று பெருமையாக பல பண்பாளர்களையும்,
பல பெரியவர்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அழகாகவும்,அமைதியாகவும் சென்றுகொண்டிருந்த
அந்த அமைப்பிலும், ஊர் மக்கள் மன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சில குறுக்குபுத்தியுடையோர் புகுந்து பெரியோர்களையும், பண்பாளர்களையும் புறம் தள்ளிவிட்டு,
இப்புல்லுரிவிகள் கிழித்த கோட்டை தாண்ட முடியாத அளவிற்கு
அப்பண்பாளர்களும் ,பெரியோரகளும் பேசா ம்டந்தைகளாகவும், பொம்மைகளாகவும் மாறிவிட்ட மாயம் நடந்தேறிவிட்டது.
இந்த போக்கை பலமுறை தட்டிகேட்ட மக்களையும், மீடியாக்களையும் மதிக்காத காரணத்தினால், பொறுத்து, பொறுத்து பார்த்த மக்கள் பொங்கியெழுந்து, தங்கள் தீர்ப்பை மாற்றி எழுதி விட்டார்கள்.
மக்கள் தீர்ப்பை மனிதாபத்தோடு ஏற்க மறுக்கும்
பல பிரிவினை வாதிகளின் வெறித்தனம் இன்னும் வடிந்தபாடில்லை.
எந்த சீமான்களின் சிந்தனைகளையும் தங்கள் பக்கம் திருப்பியாவது, எந்த வியபாரியின் உதவியை பெற்றாவது
ஒருநாள் கூட நகராட்சியை நடைபெறவிடக்கூடாது என்பதுதான்
இக்கூட்டத்தின் கொள்கையும் குறிக்கோளும் ஆகும்!
யாருக்கு நஷ்ட்டம்? யார் பாதிக்கபடுகிறார்கள்? பக்கத்து ஊர்காரர்களெல்லாம் நம்மை கேவலமாக பார்கிறார்களே என்ற தன்மான உணர்வு ஒரு சதவீதமாவது உள்ளத்தில் உறைக்க
வேண்டாமா ?
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,. எங்களுக்கு தலைவி தகுதி இழக்கவேண்டும், அப்புண்ணிய எண்ணத்தின் தீவிர தன்மையானவர்கள் எங்களின் தவப்புதல்வர்கள்!
அவர்களின் குதூகலமும், குத்தாட்டமும் இன்றைய சூழ்நிலைகேற்ப இன்றியமையாததே என்று எக்காளமிடுகிறார்கள்!
போரா என்ற நம் புனித மார்க்கத்தின் கலாச்சார செயலை கேலிசெய்து பேசிய உறுப்பினர்கூட இவர்களுக்கு இனிப்பானவர்கள்,
மத நல்லிணக்கத்தை மதிக்கும் மாண்புடையவர் என்று மகுடம் சூட்டி மகிழ்கிறார்கள். இந்த மதி இழந்தோரின் "மிதப்பு கட்டை" கவனமெல்லாம் தலைவியை தொலைத்து கட்டுவதென்ற குறிக்கோள் ஒன்று மட்டும் தான்.
அவர்களின் அகராதியின் ஆத்திசூடி யாதெனில், தலைவியை எதிர்க்கும் எவரும் எங்களின் இறுக்கமான நண்பர்களே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross