. (தவறான முறையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளைக் கண்டறிந்து, அவ்வாறு தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் படி நகராட்சியால் இன்று நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.)
அல்ஹம்துலில்லாஹ்) யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள்.!
.
(மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும்).
ஆம் ! அவசியம் இதனை மேற்கொள்ளுங்கள் !
( அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது..).
ஆம் ! நிச்சயம் கவ்ன்சிலர்களின் ஒத்துழைப்பு அவசியம் ! அவர்களின் ஆதரவு இல்லாமல் சாதிப்பது கடினம் !
(இது தவிர, மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் பரப்புரை செய்யப்பட்டது. )
ஆம் ! பொது மக்களே உங்களில் யாரும் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டு இருந்தால் உடனே அதில் இருந்து மீண்டு ,முற்றிலுமாக நீங்கி அல்லாஹ்விடம் தௌபா செய்து மீண்டும் அதில் ஈடுபடாமல் உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.!
(இந்நிலையில், மின் மோட்டார் மூலம் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி காயல்பட்டினம் நகராட்சியால் இன்று காலை துவக்கப்பட்டுள்ளது.)
ஆம் ! உங்கள் நடவடிக்கையை இறைவன் வெற்றியாக்கி தருவானாக !
வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு, நான்கு முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 4 வீடுகளில் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து எச்சரித்து சென்றனர்.
ஆம் ! சோதனையை தொடருங்கள் ! இன்னும் தோண்ட,தோண்ட எத்தனை பூதங்கள் வெளிவருமோ ! சாதனை புரியுங்கள்!
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அவர் அவர்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படவும், பிறரின் உரிமைகளை தலையிடாமல் இருக்கவும் பேரருள் புரிவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross