செய்தி: இந்திய அரசால் - மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு சிங்கை கா.ந.மன்றம் வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[06 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21882
இதனை இதனால் இவன் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் என்று வள்ளுவம் கூறுகிறது.
சகோதரர் அபூபக்கர் அவர்களின் பொறுமையான நிதானமான பேச்சை நான் கேட்டிருக்கிறேன். தாய்சபை முஸ்லிம் லீகின் மீது அவர் ஆழ்ந்த பற்று வைத்திருக்கும் நேரம் மாற்றுக்கட்சி உறுப்பினர்களை பற்றி அவர் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் கூட நிதானமாக ஒவ்வொரு சொல்லையும் அளந்து பேசுவதை நான் அவதானித்துள்ளேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி ஒருவர் பேசும்போது, YOUR DAYS ARE COUNTED என்று சொன்னார். அண்ணா அவர்கள் ஆவேசப்படாமல் MY STEPS ARE MEASURED என்று மென்மையாக பேசி எதிர் அணியையும் சிரிக்க வைத்தார். அந்த தோரணை தம்பி அபூபக்கரிடம் தெரிகிறது.
இன்ஷா அல்லாஹ் பிறைக்கொடியினை ஏந்தி நிற்கும் அவர் கரங்களில் தலைமை பொறுப்பும் இன்னும் பல பொறுப்புகளும் அவரை வந்தடையும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
SOME ARE BORN IN GREATNESS, SOME ACHIEVE GREATNESS, GREATNESS IS THRUST UPON SOME.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross