அன்பு சகோதரர் ஹிஜாஸ் மைந்தன் என்கிற ராபிய மணாளன் என்கிற M.N.L.முஹம்மது ரபீக் அவர்களுக்கு. தங்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. காயல் மண்ணும், காயல் தமிழும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் எனது பத்து வயது முதல் காயல் பட்டணத்திற்கு வெளியேதான் வசித்து வருகிறேன். பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி, விடுமுறையில் ஊருக்கு வரும்போது ஏற்படுகின்றது. அது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உங்களின் கட்டுரையை
படித்தவுடன், காயலில் கழிந்த எனது சிறுவயது நிகழ்வுகளும், சிறுவயதில் நான் பேசிய/கேட்ட காயல் பேச்சுக்களும் சுகமான நினைவுகளாக மனதில் நிழலாடின. அதன் காரணமாகவே, எனக்கு தெரிந்த வார்த்தைகளை பதிவு செய்தேன்.
இந்த தலைமுறை குழந்தைகள், நமதூர் தமிழை எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று
தெரியவில்லை. விடுமுறையில் ஊர் வரும்போது, எனது மகன் என் உம்மா லாத்தாவோடு பேசும்போது, ஒரு குழப்பமே நடக்கும். அவர்கள் பேசும் நிறைய வார்த்தைகள் என் மகனுக்கு புரியாது. அப்போதெல்லாம், அவர்கள் பேசும் வார்த்தைகளை, நான் என் மகனுக்கு புரிய வைப்பேன். எனக்கு நினைவில் உள்ள மீதமுள்ள வார்த்தைகளை கீழே கொடுத்துள்ளேன். நாம் எங்கு சென்றாலும், நமதூர் தமிழை மறக்க கூடாதென்பது எனது அவா. உங்கள் பதிவுகளை படித்திருக்கின்றேன். உங்கள் பதிவுகளும் எழுத்து நடையும் நன்றாகவுள்ளது. உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
1. வாங்கடா, காசு மாலை, ஒட்டியாணம் - தங்க ஆபரணங்கள்
2. பிச்சாட்டை, ப்ரஹண்டம் - மன உளைச்சல்
3. சம்பளங்கொட்டி உக்கார் - காலை மடக்கி தரையில் சாதாரணமாக உட்காருவது
4. கடயும் - இந்தச்சொல் கிடையாது என்கிற சொல்லுக்கு எதிர்ப்புறம். குழந்தைகள் இந்தச்சொல்லை பயன்படுத்துவார்கள்.
5. Pபைனி - பதநீர்
6. பனாட்டு - ஒரு வகை இனிப்பு பண்டம்
7. துண்டு தேங்கா – முழுத்தேங்காயை இரண்டு பாதியாக உடைத்து, சிரட்டையிலிருந்து தேங்காயை முக்கோன வடிவில் துண்டு துண்டாக வெட்டி எடுத்து கடைகளில் விற்பனை செய்வார்கள்
8. தmeez – ஒழுக்கம்
9. அந்திஸ் – பண்பு
10. நெரப்பமாக - திருப்தி அளிக்கும் வகையில்
11. குமிசமாக - குவியலாக
12. கஞ்சி கடைவது - கேலி செய்வது
13. கழுத பெரட்டுறான், பெரளி பண்றான் - சிறுவர்கள் சேட்டை பண்ணுவதை இவ்வாறு சொல்வார்கள்
14. சந்தனக்குச்சி – ஊதுவத்தி
15. தலவாணி – தலையணை
16. மெத்தை - மாடி, படுக்கை
17. மரூண்டி – மருதாணி
18. குடுத்த மண் - ஆற்று மணல்
19. சோத்த வாடா - சிகப்பு நிறமுடைய பொரியல் பண்டம்
20. கலியா - வாடா மற்றும் சமோசாவிற்கு உள்ளே வைக்கப்படும் பதார்த்தம்
21. கோப்பு - கல்யாணமான புதிதில் மாப்பிள்ளையை கிண்டல் செய்ய பெண் வீட்டார் பயன்படுத்தும் யுக்தி
22. பஞ்சாயத்து போர்டு - நகராட்சி மன்றம்
23. ஹவுழ் - பள்ளி வாசலில் வுழு செய்யுமிடம்
24. கல் Bபேக்கு - கால் பந்தாட்டத்தில் defender சிறப்பாக விளையாடினால் இவ்வாறு சொல்வார்கள்
25. தொட்டி வேட்டி - மூட்டு வேஷ்டி
26. கிடுவு - தேங்காய் மர இலை
27. அமலாகி விட்டாள் - பெண் பிள்ளை பெரியமனுஷி ஆவதை இவ்வாறு கூறுவார்கள்
28. கரட்டு வலக்கு - விடாப்பிடியாய் இருப்பவரை இவ்வாறு சொல்லுவார்கள்
29. மிஸ்கீன் – ஏழை
30. சப் – வரிசை
31. வெளம்பு - கல்யாணம் போன்ற வைபவங்களில் சாப்பாடு பரிமாறுவது
32. முன்கர் நகீர் - அதிகம் கேள்வி கேட்பவர்
33. ராளி – lorry
34. நாசுவத்தி -பல வருடங்களுக்கு முன்னால், காயலில் பிரசவர்த்திற்கு பயன்படுத்தப்பட்ட நர்ஸ்
35. வண்ணான், வண்ணாத்தி - துணி துவைக்கும் தொழில் செய்யும் ஆண், பெண்
36. வெல்லாம்புடி, ஷீலா, பாறை, ஐல, கெண்ட - மீன் வகைகள்
37. கானாங்கருத்தான் கருப்பட்டி பாச்சான் - காயல் பழமொழி
38. நாளைக்கு பெருநாள், நம்மளுக்கு நல்லது, கட்டக்கோழி அறுப்போம், கப்ப கப்ப திம்போம் - பெருநாளுக்கு முந்திய இரவில், சிறுவர்கள் மகிழ்ச்சியில் பாடும் வரிகள்
39. ஓட்டப்பல் சுப்பையா, ஒரு எடத்துக்கும் போவாதே, அப்பம் வாங்கி திங்காதே, அடிபட்டு சாவாதே - பல் உடைந்து இருக்கும் சிறுவர்களைப்பார்த்து சக சிறுவர்கள் கிண்டலாக பாடும் வரிகள்
40. நாறங்கி - தாழ்பாள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross