Re:...தாமதமாக வந்த விருது posted bymackie noohuthambi (kayalpatnam)[07 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21915
டாக்டர் தம்பி அவர்கள் குழந்தைகள் டாக்டர் என்ற பெயர் நெல்லை மாவட்டத்தில் எல்லோருக்கும் தெரியும்.
நான் சில இடங்களில் என் பெயரை நூஹுத்தம்பி என்று சொல்லும்போது தம்பி டாக்டரின் சொந்தக்காரரா என்று கேட்பார்கள். நானும் பெருமையாக தூரத்து உறவு என்று சொல்வேன்.நான் பாளையம்கோட்டையில் புனித சவேரியார் கல்லூரியில் படிக்கும்போது நடந்த செய்தி இது. 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் புகழ் அப்போதே உச்சகட்டத்துக்கு போய்விட்டது. நமது நாட்டில் ஒரு கெட்டிக்காரர் வாழும் காலத்தில் அவரை முறையாக கௌரவித்து பாராட்ட மாட்டார்கள். பாரத ரத்னா என்ற உயரிய விருது நிறையபேருக்கு அவர்கள் மறைந்த பிறகுதான் கொடுப்பார்கள். என்ன சிந்தனையோ தெரியவில்லை.
" நான் மறைந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம், நான் வாழும் காலத்தில் எனக்கு குடியிருக்க ஒரு குடிசை கட்டி தாருங்கள்" என்று ஒரு புது கவிதை சொல்கிறது..உண்மை.
நமது மண்ணின் மைந்தனுக்கு நாம் செய்யவேண்டியது, உடனடியாக KMT மருத்துவமனையின் தலைமை பொறுப்பேற்றுள்ள டாக்டர் அஷ்ரப் அவர்கள் நமது தம்பி டாக்டர் அவர்களுக்கு ஓர் வரவேற்பு விழா வைத்து நமதூர் டாக்டர்கள் முக்கிய பிரமுகர்கள், பெரியவர்கள் எல்லோரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இந்த வாழ் நாள் சாதனையாளருக்கு ஒரு சிறப்பு மருத்துவருக்கு நல்லதொரு விருதை வழங்க வேண்டும் என்று இந்த இனைய தளம் மூலம் வேண்டிக்கொள்கிறேன்
விருதுகளால் சிலருக்கு பெருமை. சிலரால் அந்த விருதுக்கு பெருமை. தம்பி டாக்டர் அவர்களால் இந்த விருது பெருமை பெறுகிறது.
HE ALONE LIVES WHO LIVES FOR OTHERS, OTHERS ARE MORE DEAD THAN ALIVE.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross