Re:...அவசியம்தானா ECR ? posted byOMER ANAS (DOHA QATAR)[07 September 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21924
அஸ்ஸலாமு அழைக்கும்!
ECR கிழக்கு கடற்கரைச் சாலையினைப் பற்றி முழு விபரம் அறிந்தவர்கள், அல்லது குழு ஏற்ப்பாட்டாளர்கள், கீழ்க்கண்ட எனது ஐயங்களை தெளிவு படுத்தினால் இதைப்பற்றி அறியாதோர் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.
1 --- ECR வழித்தடம் வருமேயானால் நமதூருக்கு எந்த வழியாகவரும்? இதனால் ஏதும் நமதூரின் வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகுமா?
2 -------இதனால் ஒலிமாசு, மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்ப்படாதா? இப்ப உள்ள நமதூரின் அழகிய கடற்க்கரை பாதிப்புக்கு உள்ளாகாதா? அங்கே அனாச்சாரங்கள் தலைதூக்காதா?
3 ---------இது பாதை நமதூரையே அழித்துக்கொண்டு இருக்கும் DCW எனும் மரண அரக்கன் தொழிற்ச்சாலையின் கழிவுகளை கனரக வாகனம் கொண்டு சுமந்து செல்லும் சாலையாகத்தான் பயன்படுமா? இதனால் நமதூருக்கு என்ன நன்மை?
இதன் உண்மை நிலையை தயவு செய்து அறியத்தந்தால் என் போன்றோரின் மேலே கேட்ட கேள்விகளுக்கு விடைகிடைக்க ஓர் வாய்ப்பாக அமையும். ஏன் என்றால் நமதூரின் நன்மையினைக் கருதியே எதுவும் எப்பவும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து! நன்றி!!! வஸ்ஸலாம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross